ஜூன் 15க்குள் 5.86 கோடி தடுப்பூசிகள் விநியோகிக்க மத்திய அரசு திட்டம்

ஜூன் 15க்குள் 5.86 கோடி தடுப்பூசிகள் விநியோகிக்க மத்திய அரசு திட்டம்

1 mins read
87b5bdfc-b090-4dc5-8bd5-655c557039de
-

புது­டெல்லி: 'மே 1ஆம் தொடங்கி ஜூன் 15 ஆம் தேதிக்­குள் 5 கோடியே 86 லட்­சத்து 29 ஆயி­ரம் தடுப்­பூசி மருந்­து­கள், மாநி­லங்­க­ளுக்­கும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்­கும் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என சுகா­தா­ரம் மற்­றும் குடும்ப நலத்­துறை தெரி­வித்­துள்­ளது.

மாநி­லங்­க­ளுக்­கும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்­கும் வழங்­கப்­பட்­டுள்ள தடுப்­பூ­சி­கள் மற்­றும் அவற்­றின் கையி­ருப்பு நில­வ­ரம், உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மாநி­லங்­களும், தனி­யார் மருத்­து­வ­ம­னை­களும் நேர­டி­யா­கக் கொள்­மு­தல் செய்­வ­தற்­கான எண்­ணிக்கை போன்ற தக­வல்­க­ளைக் கடந்த இரண்டு வார கால­மாக மத்­திய சுகா­தார அமைச்­ச­கம் முன்­கூட்­டியே வெளி­யிட்டு வரு­கிறது.

தொடர்ந்து, மே மற்­றும் ஜூன் மாதத்­தின் முதல் இரண்டு வார காலத்­திற்கு இந்­திய அர­சி­ட­மி­ருந்து (இல­வ­ச­மாக) மாநி­லங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள தடுப்­பூ­சி­ மருந்துகள் (கோவி­ஷீல்டு மற்­றும் கோவாக்­சின்), மே மற்­றும் ஜூன் மாதங்­களில் மாநி­லங்­களும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களும் நேர­டி­யா­கக் கொள்­மு­தல் செய்­வ­தற்­கான எண்­ணிக்கை போன்ற தக­வல்­களை மத்­திய அமைச்­ச­கம் மாநி­லங்­க­ளுக்­கும், யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்­கும் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாறு முன்­கூட்­டியே தெரி­விக்­கப்­ப­டு­வ­தால் மாநி­லங்­கள் உரிய திட்­டத்தை வகுப்­ப­தற்கு ஏது­வாக இருக்­கும்.

மத்­திய அரசு வெளி­யிட்­டுள்ள தக­வ­லின் படி, மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்­தம் 5 கோடியே 86 லட்­சத்து 29 ஆயி­ரம் டோஸ்­கள், மாநி­லங்­க­ளுக்­கும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்­கும் இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.

தடுப்­பூ­சித் திட்­டத்தை நேர்­மை­யா­க­வும் முறை­யா­க­வும் முன்­னெ­டுத்­துச் செல்­லும் வகை­யில் மாநி­லங்­க­ளுக்­கும், யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்­கும் மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.