'கர்நாடகத்தில் நவம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி'

'கர்நாடகத்தில் நவம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி'

1 mins read
52a0b01c-86f2-4430-95ce-eb0620e3353c
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தின் கிரா­மப்­பு­றங்­களில் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் அம்­மா­நி­லம் தடுப்­பூ­சிப் பணியை முடுக்­கி­விட்­டுள்­ளது.

2021 அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­க­ளுக்­குள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­படும் என்று அம்­மா­நி­லத்­தின் சுகா­தார அமைச்­சர் சுதாகர் தெரி­வித்­துள்­ளார்.

இரண்டு கோடி 'கொவி­ஷீல்டு' தடுப்­பூசி கொள்­மு­தல் செய்ய அம்­மா­நி­லம் ஒப்­பந்­தம் செய்­துள்­ளது. இதில் இது­வரை 2 லட்­சம் தடுப்­பூசி கர்­நா­ட­கத்­திற்கு வந்­துள்­ளது. மத்திய அரசிடம் இருந்து ஒரு கோடியே 11 லட்சத்து 26,000 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது. அத்துடன் நேரடியாக 9.50 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்துள்ளது.

இது­வரை 1,13,61,234 பேருக்கு தடுப்­பூசி வழங்­கப்­பட்­டுள்­ளது. கோவேக்­சின், ஸ்புட்­னிக் தடுப்­பூ­சி­கள் கர்­நா­ட­கத்­தி­லேயே உற்­பத்தி செய்ய இருப்பதாகவும் அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.