முகக்கவசம் அணியாத பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து அடித்த போலிஸ்

முகக்கவசம் அணியாத பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து அடித்த போலிஸ்

1 mins read
0e170e03-13dd-41dd-af34-ec9fd7984456
முகக் கவசம் அணியாததால் தலைமுடியைப் பிடித்துத் இழுத்து தாக்குதல் நடத்திய போலிஸ்காரர். படம்: ஊடகம் -

போபால்: முகக் கவசம் அணியாததால் ஒரு பெண்­ணின் தலை­மு­டியைப் பிடித்து, தர­த­ர­வென இழுத்து தாக்­கும் போலி­சா­ரின் இந்­தச் செயலை அம்­ப­லப்­ப­டுத்­தும் காணொளி ஒன்று சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கிறது.

தொற்று அதி­க­மாக பாதித்த மாநி­லங்­களில் ஒன்றான மத்­திய பிர­தே­சத்­தில் முழு ஊர­டங்கு அம­லில் உள்­ளது. இந்­நி­லை­யில், சாகர் மாவட்­டத்­தில் ஓர் அதிர்ச்சி சம்­ப­வம் நடந்­துள்­ளது. இந்த பகு­தி­களில் போலி­சார் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது ஒரு பெண் தன்­னு­டைய மக­ளு­டன், கடைக்­குச் சென்­றுள்­ளார். கடை­களை சீக்­கி­ரம் அடைத்து விடு­வார்­கள் என்­ப­தற்­காக, வீட்­டிற்­குத் தேவை­யான பொருட்­களை வாங்­கச் சென்­றுள்­ளார்.

ஆனால், அவர் முகக்­க­வ­சம் அணி­யா­மல் சென்­ற­தைக் கவ­னித்த போலிஸ்­கா­ரர்கள் அவரை சர­மா­ரி­யாகத் தாக்­கி­யுள்­ள­னர். பிறகு, தங்­க­ளின் போலிஸ் வாக­னத்­தில் ஏறு­மா­றும் சொல்லி உள்­ள­னர். ஆனால், அந்த பெண்ணோ, போலிஸ் வாக­னத்­தில் ஏற மறுத்­துள்­ளார்.

இத­னால் மேலும் ஆத்­தி­ர­ம­டைந்த போலி­சார், அவ­ரது தலை­மு­டியைப் பிடித்து, தர­த­ர­வென இழுத்து வந்து மறு­ப­டி­யும் கண்­மூ­டித்­த­ன­மாகத் தாக்­கி­னர்.