கொவிட்-19 மரணங்கள்; கண்கலங்கிய மோடி

கொவிட்-19 மரணங்கள்; கண்கலங்கிய மோடி

1 mins read
2fade93f-39fa-4f70-8e15-d5a0d19a99d2
கிருமித்தொற்று அன்புக்குரியவர்களின் உயிர்களைபறித்து விட்டதாகக் கூறி பிரதமர் மோடி கண்கலங்கினார். படம்: டிடி தொலைக்காட்சி -

புது­டெல்லி: பிர­த­மர் மோடி நேற்று கிரு­மித் தொற்று நில­வ­ரம் குறித்து வார­ணா­சி­யில் உள்ள மருத்­து­வர்­கள், முன்­க­ளப்­ப­ணி­யா­ளர்­களிடம் காெணாளி மூலம் ஆலோ­சனை நடத்­தி­னார்.

அப்­போது பிர­த­மர் கண்­க­லங்­கி­ய­தாக தினத்­தந்தி வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்தது.

"கொரோனா தொற்­றின் 2வது அலை­யில் நாம் பல்­மு­னைப் போர் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம். ஆனால் இந்த அலை­யில் தொற்­றின் வேகம் அதி­க­மாக இருக்­கிறது.

"அதே­போல் மருத்­து­வ­ம­னை­யில் நோயா­ளி­கள் அதிக நாட்­கள் சிகிச்­சை­யில் இருக்க வேண்­டிய சூழ­லும் ஏற்­பட்­டி­ருக்­கிறது," என்று கூறிய திரு மோடி, இந்த கொரோனா தொற்­றின் 2வது அலை நம்­மி­ட­மி­ருந்து நிறைய பேரைப் பறித்­து­விட்­டது என்று கண்­க­லங்­கி­ய­படி கூறி­னார்.

கொரோ­னா­வால் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழந்­த­வர்­க­ளுக்கு அவர் ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக் கொண்­டார்.

"கொரோ­னா­விற்கு எதி­ரான நமது தற்­போ­தைய போரில், கறுப்­புப் பூஞ்சை என்ற நெருக்­க­டி­யும் சேர்ந்­துள்­ளது. அதனை எதிர்­கொள்ள முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களில் கவ­னம் செலுத்த வேண்­டும்.

"இது நாம் பதற்­றப்­பட வேண்­டிய தரு­ண­மல்ல. நாம் மிக நீண்ட அச்­சு­றுத்­தலை சமா­ளிக்க வேண்­டி­யுள்­ளது. குழந்­தை­களை பாது­காப்­ப­தி­லும் நாம் கவ­னம் செலுத்த வேண்­டும். தடுப்­பூசி செலுத்­தும் பணி­கள் நமது கூட்டு பொறுப்­பாக இருக்க வேண்­டும்," என்று பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­னார்.