'மிக்-21' ரக போர் விமான விபத்தில் விமானி மரணம்

'மிக்-21' ரக போர் விமான விபத்தில் விமானி மரணம்

1 mins read
44bf2664-d3f1-4519-81a5-e0eef4d8049a
-

அமிர்­த­ச­ரஸ்: இந்­திய விமா­னப் படைக்­குச் சொந்­த­மான 'மிக்-21' ரக போர் விமா­னம் விபத்­துக்கு உள்­ளா­ன­தில் அதன் விமானி உயிரிழந்­தார்

பஞ்­சாப் மாநி­லம் மோகா அருகே நேற்று முன்­தி­னம் இரவு பயிற்­சி­யில் ஈடு­பட்டு இருந்­த­போது விமா­னம் விபத்­துக்­குள்­ளா­னது. இதில் விமானி அபி­னவ் சவுத்ரி பலி யானார்.

விமா­னி­யின் உயி­ரி­ழப்­புக்கு இந்­திய விமா­னப்­படை இரங்­கல் தெரி­வித்­துள்­ளது.

"பயிற்­சியை முடித்­துக்­கொண்டு சுரத்­கார்­குக்­கு விமானம் திரும்பி கொண்­டி­ருந்­த­போது மோகா என்ற இடத்­தில் விபத்து ஏற்பட்டது," என்று விமா­னப்படை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­தாக 'த இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' குறிப்­பிட்­டது.

விபத்து பற்றி கேள்­வி­யுற்­ற­தும் உள்­ளூர் போலிஸ்­கா­ரர்­களும் விமா­னப் படை அதி­கா­ரி­களும் சம்­பவ இடத்­துக்கு விரைந்­த­னர். நான்கு மணி நேர தேட­லுக்­குப் பிறகு விமா­னி­யின் உடல் மீட்­கப்பட்­டது.

விபத்து நிகழ்ந்த இடத்தி லிருந்து இரண்டு கிலோ மீட்­டர் தொலை­வில் அவ­ரது உடல் கண்டு பிடிக்­கப்­பட்­டது.

இந்த விபத்­தில் வேறு யாரும் காயம் அடை­ய­வில்லை என்று அதி காரி­கள் கூறி­னர்.

பார­சூட் ஒன்­றும் திறந்து காணப்­பட்­டது. பார­சூட்டை பயன்­ப­டுத்தி விமானி பாது­காப்­பாக தரை­யி­றங்க முயற்சி செய்­துள்­ளார். ஆனால் அவ­ரது கழுத்து, முது­கெ­லும்பு முறிந்து அவர் உயி­ரி­ழந்­தார். அவர் தன்னிடம் இருந்த சாதனத்தின் மூலம் அவசர அழைப்பும் விடுத்தார் என்று தெரிகிறது.

விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் மிக்-21 போர் விமானங்கள் தொடர்பான மூன்றாவது விபத்து இது.