புதுடெல்லி: இந்திய தயாரிப்பான கோவாக்சின் கொரோனா தடுப்
பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி இன்னும் கிடைக்காததால் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உலக நாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிரமம் ஏற்படலாம் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் அவசரப் பயன்பாட்டுப் பட்டியலில் இடம்பெறவில்லை. கோவிஷீல்ட் அதில் இடம்பெற்று உள்ளது.
இப்பட்டியலில் இணைத்துக்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தை நாடியபோதிலும் கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான கூடுதல் விவரங்களை நிறுவனம் கேட்டுள்ளது.
நிறுவனத்தின் ஆக அண்மைய வழிகாட்டிக் குறிப்புகளில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மே-ஜூன் மாத இடைப்பகுதியில் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி சமர்ப்பித்தலுக்கு முந்திய சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பாரத் பயோடெக் தனது தடுப்பூசி விவரங்களைத் தெரிவித்தாலும் அதனை பட்டியலில் இணைத்துக்கொள்ளலாமா என்று அந்நிறுவனம் முடிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் அதன் மீதான ஒவ்வொரு மதிப்பீட்டு நடவடிக்கைக்கும் சில வாரங்கள் ஆகும். உலக நாடுகள் தங்களது சுகா
தாரத் துறை அனுமதியைப் பெற்ற தடுப்பூசிகளையும் உலக சுகாதார நிறுவனம் அனுமதித்த தடுப்பூசி
களையும் போட்டுக்கொண்டவர்
களையே அனுமதிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் பயணக் கொள்கைகளை பல நாடுகள் வெளியிட்டு வருகின்றன.
கோவாக்சின் தடுப்பூசியை இருமுறை போட்டுக்கொண்டாலும் உலக நாடுகளைப் பொறுத்தவரை தடுப்பூசி போடாதவர்களாகவே அவர்கள் கருதப்படக்கூடும் என இந்திய அதிகாரி ஒருவர் கூறினார்.

