4.5 மில்லியன் ஏர் இந்தியா பயணிகளின் விவரங்கள் கசிவு

4.5 மில்லியன் ஏர் இந்தியா பயணிகளின் விவரங்கள் கசிவு

1 mins read
8e58c4da-9752-458a-bab4-febcc0f72ada
-

புது­டெல்லி: ஏர் இந்­தியா இணை­யத்­த­ளத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட இணை­யத் தாக்­கு­தல் கார­ண­மாக 4.5 மில்­லி­யன் (45 லட்­சம்) பய­ணி

­க­ளின் தனி­ந­பர் விவ­ரங்­கள் கசிந்­துள்­ள­தாக அறிவிக்கப்பட்டு உள்­ளது.

இது­தொ­டர்­பாக நேற்று முன்­

தி­னம் இரவு, ஏர் இந்­தியா நிறு­வ­னம் வெளி­யிட்­ட அறிக்­கை­யில்­ ஏர் இந்­தியா விமான நிறு­வ­னத்­தில் பய­ணம் செய்த 45 லட்­சம் பய­ணி­க­ளின் பெயர், பிறந்த தேதி, கடன்­பற்று அட்டை எண், கடப்­

பி­தழ் எண், தொலை­பேசி எண்­கள், தொடர்­புத் தக­வல் போன்­றவை உள்­ளிட்ட தர­வு­கள் கசிந்­துள்­ள­

தா­கத் தெரி­வித்­துள்­ளது.

2011 ஆகஸ்ட் 26 முதல் 2021 பிப்­ர­வரி 3 வரை பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த தக­வல்­கள் கசிந்­துள்­ளன. இது­தொ­டர்­பான முதல் அறி­விப்பு பிப்­ர­வரி 25ஆம் தேதி பய­ணி­க­ளின் விவ­ரங்­களை சேமிக்­கும் தரவு செயல்­பாட்டு நிறு­வ­னத்­தி­டம் இருந்து பெறப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வத்­தால் உலக நாடு­க­ளைச் சேர்ந்த 45 லட்­சம் ஏர் இந்­தியா பய­ணி­

க­ளின் தர­வு­கள் திரு­டப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

இருப்­பி­னும் கடன்­பற்று அட்டை­யின் ரக­சிய சிவிவி எண் உள்­ளிட்ட விவ­ரங்­கள் எது­வும் திரு­டப்­ப­ட­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள ஏர் இந்­தியா, பய­ணி­கள் தங்­க­ளது தரவு பாது­காப்பை உறுதி செய்­யும் வகை­யில் ரக­சிய எண்ணை மாற்­றிக்­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தி உள்ளது.

ஏற்­கெ­னவே கடன் சுமை­யில் தத்­த­ளிக்­கும் ஏர் இந்­தியா நிறு­வ­னத்தை விற்க ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரும் வேளை­யில் தரவு கசிவு அந்­நி­று­வ­னத்­திற்­குப் புதிய தலை­வ­லியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.