செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ae4ad586-b27b-434c-be9b-53d3036f0509
-

தடுப்பூசி போட்டுக்கொண்ட

120 வயது மூதாட்டிக்கு கௌரவம்

ஜம்மு: ஜம்மு-காஷ்­மீ­ரில் உதம்­பூர் மாவட்­டம் கதி­யாஸ் என்ற கிரா­மத்தை சேர்ந்த தோலி தேவி என்ற மூதாட்­டிக்கு 120 வய­தா­கிறது. இந்தத் தள்­ளாத வய­தி­லும் சுறு­சு­றுப்­பு­டன்

இருக்­கும் அவர் மற்­ற­வர்­க­ளுக்கு வழி­காட்­டும் வகை­யில் கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ளார். தடுப்­பூசி போட்­ட­தால் தனக்கு எந்த உடல்­ந­லப் பிரச்­சி­னை­யும் வர­வில்லை என்­றும் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­றும் அந்த மூதாட்டி உற்­சா­க­மா­கக் கூறி­னார். மூதாட்­டி­யின் செய­லால் கவ­ரப்­பட்ட வடக்கு ராணு­வத் தள­பதி லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஒய்.கே. ஜோஷி மற்­றும் ராணுவ

அதி­கா­ரி­கள் தோலி தேவி பாட்­டி­யின் வீட்­டுக்கு நேர­டி­யாகச் சென்று கிராம மக்­கள் முன்­னி­லை­யில் அவரை கௌர­வித்­த­னர். முத­லில் தயக்­கம் காட்­டிய கிராம மக்­களில் பல­ரும்

தற்போது தடுப்­பூசி போட்­டுக்­கொள்கின்றனர்.

'கொரோனா லேகியம்' வாங்க

ஒரே இடத்தில் கூடிய 40,000 பேர்

நெல்­லூர்: ஆந்­திர மாநி­லம் நெல்­லூரை அடுத்த முத்­துக்­கூறு தாலு­கா­வைச் சேர்ந்த கிருஷ்­ணா­பு­ரம் என்­னும் கிரா­மப்

பகு­தி­யில் கொரோனா பாதித்­த­வர்­க­ளுக்கு ஆறு வகை­யான ஆயுர்­வேத லேகி­யம் தயார் செய்து இல­வ­ச­மாக வழங்­கு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது. இந்த லேகி­யம் சாப்­பிட்­ட­வர்­க­ளுக்கு கொரோனா பாதிப்பு குண­ம­டைந்­த­தா­க­வும் பக்­க­வி­ளை­வு­கள் எது­வும் ஏற்­ப­ட­வில்லை என­வும் தக­வல்­கள் பர­வின. இத­னால் இந்­தக் கிரா­மத்­தில் நாளுக்கு நாள் பொது­மக்­க­ளின் கூட்­டம் அதி­க­ரித்­தது. பல்­வேறு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வந்த நோயா­ளி­கள் ஆம்­பு­லன்ஸ் வாக­னங்­களில் கிருஷ்­ணா­பு­ரம் கிரா­மத்தை நோக்கி படை­யெ­டுக்க தொடங்­கி­னர். இத­னால் மருத்­து­வ­ம­னை­களில் கொரோனா வார்­டு­கள் காலி­யாகக் காணப்­பட்­டன. நேற்று முன்தினம் 40,000 பேர் ஒரே இடத்தில் கூடி­யதால் கொரோனா பர­வும் ஆபத்து உரு வானதாலும் லேகி­யத்­தின் செயல்­பா­டு­கள் தெரி­யா­த­தாலும் லேகி­யம் வழங்­கு­வதை நிறுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டது.

'இந்திய வகை கிருமி' பதிவுகளை நீக்க மத்திய அரசு உத்தரவு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் முத­லில் கண்­ட­றி­யப்­பட்ட B1617 கொரோனா கிரு­மியை புதிய வகை என்று மட்­டுமே உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்ள நிலை­யில், இந்­தி­யா­வின் பெயரை சேர்த்து வெளி­யான பதி­வு­களை நீக்­கு­மாறு மத்­திய தக­வல் தொழில்­நுட்­பத் துறை சமூக ஊட­கங்­க­ளைக் கேட்­டுக் கொண்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக சமூக வலைத்­தள நிறு­வ­னங்­க­ளுக்கு இத்­துறை அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில், 'இந்­திய வகை கிருமி' என்று குறிப்­பி­டு­வ­தற்­கான எந்த அடிப்­படை ஆதா­ர­மும் இல்லை. இந்­தப் பெய­ரில் உள்ள பதி­வு­கள் அனைத்­தை­யும் உட­ன­டி­யாக நீக்க வேண்­டும். உரு­மா­றிய கொரோனா கிரு­மியை இந்­தி­யா­வின் பெயரை இணைத்து குறிப்­பி­டு­வது முற்­றி­லும் தவ­றா­னது," என்று கூறப்­பட்­டுள்­ளது.