இந்தியா-ரஷ்யா தடுப்பூசி தயாரிப்பு

இந்தியா-ரஷ்யா தடுப்பூசி தயாரிப்பு

2 mins read
0bb6f850-f998-409d-b973-ab3d424790d4
ரஷ்யாவின் தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வும் ரஷ்­யா­வும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­திற்­குள் கூட்­டாக 8.5 கோடி 'ஸ்புட்­னிக் வி' தடுப்­பூ­சி­க­ளைத் தயா­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளன.

இதற்­கான உற்­பத்தி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்­கும் என்று ரஷ்­யா­வுக்­கான இந்­திய தூதர் பாலா வெங்­க­டேஷ் வர்மா தெரி­வித்­துள்­ளார். தற்­போது 2 லட்­சம் முறை போடக்­கூ­டிய தடுப்­பூசி மருந்­து­கள் இந்­தி­யா­வுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

இந்­தத் தக­வலை தின­ம­லர் வெளி­யிட்­டுள்­ளது.

"இந்­தி­யா­வுக்கு ஏற்­கெ­னவே 2.1 லட்­சம் முறை போடக்­கூ­டிய மருந்­து­கள் அனுப்­பப்பட்­டுள்­ளன. மே மாத இறு­திக்­குள் 30 லட்­சம் முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சி­கள் இந்­தி­யா­வுக்கு அனுப்­பப்­பட உள்­ளது. ஜூன் மாதம் 50 லட்­சம் குப்­பி­கள் அனுப்பி வைக்­கப்­படும். ஆகஸ்ட் மாதத்­தில் இந்தியாவிலே தடுப்­பூசி உற்­பத்தி தொடங்­கும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

"இந்­தி­யா­வில் 'ஸ்புட்­னிக் வி' விநி­யோ­கம் மூன்று கட்­டங்­க­ளாக நடை­பெ­றும் என்று அவர் தெரி­வித்­தார். முத­லா­வ­தாக ரஷ்­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்டு விநி­யோ­கிக்­கப்­படும்.

"இதற்­கான பணி­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. 2வது தடுப்­பூசி மூலப்­பொ­ருள் அதிக அளவு இந்­தி­யா­வுக்கு அனுப்­பப்­படும். இவை உட­ன­டி­யாக பயன்­ப­டுத்­தும் வகை­யில் இருக்­கும். மூன்­றா­வது, 'ஸ்புட்­னிக்' மருந்து தயா­ரிக்­கும் தொழில்­நுட்­பம் இந்­திய நிறு­வ­னத்­துக்கு அளிக்­கப்­பட்டு அந்­நி­று­வ­னம் இந்த மருந்தை உற்­பத்தி செய்­யும்.

"மூன்று கட்­டங்­க­ளி­லும் ஒட்டு மொத்­த­மாக 8.5 கோடி தடுப்­பூ­சி­கள் இந்­தி­யா­வுக்­குக் கிடைக்­கும்," என்று மேலும் அவர் கூறி­னார்.

ஒரு முறை போடக்­கூ­டிய 'ஸ்புட்­னிக் லைட்' மருந்­துக்கு இந்­திய அரசு முறைப்­படி அனு­மதி வழங்­கும் போது உற்­பத்­திக்­கான கூட்டு முயற்சி தொடங்­கும் என்­றார் அவர்.

`ஸ்புட்­னிக் லைட்' தடுப்­பூசி மருந்து 79.4 விழுக்­காடு நோய் எதிர்ப்­புத் திறன் கொண்­டது.

இது ஒரு முறை போட்­டுக்­கொண்­டால் போது­மா­னது.

இரண்டு முறை தடுப்­பூசி போடு­வ­தன் மூலம் கிடைக்­கும் நோய் எதிர்ப்­புத் திற­னை­விட ஒரு முறை போடக்­கூ­டிய `ஸ்புட்­னிக் லைட்' மருந்து சிறந்­தது என்று பாலா வெங்­க­டேஷ் தெரி­வித்தார். ஏற்கெனவே 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் 'கொவிஷீல்ட்' தடுப்பூசியும் 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசியும் இந்தி யாவில் பயன்படுத்தப்படுகிறது.