கறுப்பு பூஞ்சையால் 8,000 பேர் பாதிப்பு

கறுப்பு பூஞ்சையால் 8,000 பேர் பாதிப்பு

2 mins read
b206768c-67a6-4155-9518-a72e2fdf3347
-

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் 8,800 பேருக்கு மேல் கறுப்பு பூஞ்­சை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சில மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில் அந்­நோ­யால் பாதிக்­கப்­ப­டு­ப­வா்­க­ளின் எண்­ணிக்கை தொடா்ந்து அதி­க­ரித்து வரு­கிறது என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

சில மாநி­லங்­கள் கருப்­புப் பூஞ்சை பாதிப்பை தொற்று­நோயாக அறி­வித்­துள்­ளன.

இந்த நிலை­யில், இந்­தியா முழு­வ­தும் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 8,800ஐத் தாண்­டி­யுள்­ள­தாக மத்­திய அமைச்­சர் சதா­னந்த கவுடா தெரி­வித்­துள்­ளார்.

இதன் கார­ண­மாக மாநில அரசு­ க­ளுக்கு கூடு­த­லாக 23,000 மருந்து குப்­பி­கள் அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் சேலம், தஞ்சை, கோவை உள்­ளிட்ட வட்­டா­ரங்­க­ளி­லும் கறுப்பு பூஞ்சை பரவி வரு­கிறது.

கொரோனா கிரு­மித்­தொற்று ஒரு பக்­கம் பொது மக்­களை அச்­சு­றுத்தி வரும் வேளை­யில் மற்­றொரு பக்­கம் கறுப்பு பூஞ்சை என்ற புதிய நோய் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி வரு­கிறது. ஏற்­கெ­னவே சென்னை, மதுரை உள்­ளிட்ட ஒரு சில நக­ரங்­களில் கருப்பு பூஞ்­சை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

தற்­போது கோவை, சேலம், தஞ்சை உள்­ளிட்ட பகு­தி­களில் சிலர் கறுப்பு பூஞ்­சை­யால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தாக தக­வல்­கள் வெளி­வந்­துள்­ளன

கோவை மாவட்­டத்­தில் மட்­டும் ஆறு பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­வட்ட ஆட்­சி­யர் நாக­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார். அதே­போல் தஞ்சை மாவட்­டத்­தில் ஒரு பெண் உள்­பட 5 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் தற்­போது ஐந்து பேரும் சிகிச்சை பெற்று நல­மாக இருப்­ப­தா­க­வும் தக­வல் வெளி­வந்­துள்­ளது. 'வெப்­து­னியா' இந்­தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளது.

சேலம் மாவட்­டத்­தில் ஐந்து பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் சேலம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.