மல்யுத்த வீரர் கைது

மல்யுத்த வீரர் கைது

1 mins read
c632af40-bbe5-46f7-99ba-96d50751d8fb
சுஷில்குமார்கோப்புப் படம்: தமிழகஊடகம் -

புதுடெல்லி: கொலை வழக்கு தொடர்பில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மல்யுத்த வீரரான சுஷில்குமார், 37, ஒலிம் பிக்கில் இரு பதக்கங்கள் பெற்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

இவர் மீது பிணையில் வெளி வர முடியாத கைது ஆணையும் பிறப்பிக்கப் பட்டது. இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி போலிசார் அறிவித்ததாக தினமலர் செய்தி குறிப்பிட்டது. இதற்கிடையே சுஷில்குமார் தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடியானது. இந்நிலையில், இவரை கைது செய்த பஞ்சாப் போலிசார், டெல்லி போலிசிடம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை டெல்லி குற்றப்பிரிவு சிறப்புப் பிரிவு அதிகாரி நீரஜ்குமார் உறுதி செய்துள்ளார்.