இளைஞரை அறைந்த ஆட்சியர் இடமாற்றம்

இளைஞரை அறைந்த ஆட்சியர் இடமாற்றம்

2 mins read
aa13c8a1-384e-4258-8f23-fe8d9affdba2
இளைஞரை மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காணொளிப்படம்: தினமலர் -

சூரஜ்­பூர்: சட்டீஸ்கர் மாநி­லத்­தில் ஊர­டங்கு விதி­மு­றை­களை மீறி­ய­தா­கக் கூறப்­படும் இளை­யரை மாவட்ட ஆட்­சி­யர் அறைந்த காணொளி சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கிறது.

அம்­மா­நி­லத்­தில் உள்ள சூரஜ்­பூ­ரில் சாஹில் குப்தா என்ற அந்த இளை­யர் தனது இரு சக்­கர வாக­னத்­தில் அரு­கில் உள்ள மருந்துக் கடைக்கு மருந்து வாங்க சென்­ற­போது அவ்­வ­ழி­யாக வந்த போலி­சார் தடுத்து நிறுத்­தி­னர்.

வாக­னத்­தின் ஆவ­ணங்­களை அவர் போலி­சா­ருக்கு காட்­டும்­போது அங்கு மாவட்ட ஆட்­சி­யர் ரன்­பீர் ஷர்­மா­வும் வரு­கி­றார்.

அவர், இளை­ய­ரின் கைப்­பே­சியை வாங்­கிப் பார்த்து தரை­யில் வீசி உடைக்­கி­றார்.

அது­மட்­டும் இல்­லா­மல் மாவட்ட ஆட்­சி­யர் அந்த இளை­ஞரை கன்­னத்­தில் ஓங்கி அறைந்­தார். பின்­னர் போலி­சா­ரும் அந்த இளை­ஞரை தாக்­கி­னர். இந்த காெணாளி இணை­யத்­தில் வெளி­யாகி கடும் சர்ச்சையை ஏற்­ப­டுத்­தி­யது.

அந்த இளை­ஞர் இரு ­சக்­கர வாக­னத்­தில் அதி­வே­க­மாக சென்­ற­தா­க­வும் அத­னா­லயே அவரை தடுத்து நிறுத்தி விசா­ரித்­த­தா­க­வும் அவர் மீது அதி­வே­க­மாக சென்­ற­தற்­காக வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் போலி­சார் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் நடந்த சம்­ப­வம் குறித்து மாவட்ட ஆட்­சி­யர் ரன்­பீர் ஷர்மா மன்­னிப்பு கேட்­டுள்­ளார்.

இது குறித்து பேசிய அவர், "அந்த நபர் தடுப்­பூசி வாங்­கு­ வதற்கு வெளியே வந்­த­தா­கக் கூறி­னார், ஆனால் சரி­யான ஆவ­ணம் இல்லை. பின்­னர், அவர் தனது பாட்­டி­யைப் பார்க்­கப் போவ­தா­கக் கூறி­னார். அவர் தவ­றாக நடந்து கொண்ட தரு­ணத்­தில் நான் அவரை அறைந்­தேன். அவ­ருக்கு வயது 23-24க்குள் இருக்­கும். ஆனால் 13 வயது அல்ல. எனது நடத்­தைக்கு நான் வருந்­து­கி­றேன். மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­கி­றேன்." என்று கூறி­யுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக ஐஏ­எஸ் சங்­கம் வெளி­யிட்ட செய்திக்கு­றிப்­பில் "சட்டீஸ்கர் ஆட்­சி­யர் சூரஜ்­பூ­ரின் நடத்­தையை ஐஏ­எஸ் சங்­கம் கடு­மை­யாக கண்­டிக்­கிறது. இது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது, மற்­றும் சேவை, நாக­ரி­கத்­தின் அடிப்­ப­டைக் கொள்­கை­க­ளுக்கு எதி­ரா­னது. கடி­ன­மான காலங்­க­ளி­லும் சமு­தா­யத்­திற்கு ஆரோக்­கி­ய­மான செயல்­களைச் செய்ய வேண்­டும்," என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே மாவட்ட ஆட்­சி­யர் ரன்­பீர் ஷர்­மாவை இட­மாற்­றம் செய்து மாநில முதல்­வர் பூபேஷ் பாகல் உத்­த­ர­விட்­டுள்­ளார்.