5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு

2 mins read
71865c08-48ed-41c5-a151-ed4a66ccd218
-

புது­டெல்லி: கறுப்­புப் பூஞ்சை நோய் குறித்து பொது­மக்­கள் அச்­ச­ம­டை­யத் தேவை­யில்லை என மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன் கூறி­யுள்­ளார்.

கறுப்­புப் பூஞ்சை பாதிப்­பைத் தொற்று நோயாக அறி­வித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கும்­படி மாநில அர­சு­க­ளுக்கு தற்­போது மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் கறுப்­புப் பூஞ்சை நோயின் தாக்­கம் அதி­க­ரித்து வரு­கிறது. பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் இந்த நோய் பரவி இருப்­ப­தாக தொடர்ந்து தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன.

இந்­நி­லை­யில் நாடு முழு­வ­தும் இது­வரை இந்த நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 5,424 என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

நேற்று டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன், இது­வரை 18 மாநி­லங்­களில் கறுப்­புப் பூஞ்சை தொற்று பாதிப்பு இருப்­பது பரி­சோ­த­னை­கள் மூலம் உறுதி செய்­யப்­பட்­டதாகக் குறிப்­பிட்­டார்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 4,556 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்ட்­ட­வர்­கள் என்­றும் 55 விழுக்­காட்­டி­ன­ருக்கு நீரி­ழிவு பாதிப்பு உள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே கொரோனா தொற்று பாதிப்­பி­லி­ருந்து மீளும் குழந்­தை­க­ளுக்கு 4 முதல் 6 வாரங்­க­ளுக்­குப் பிறகு பல்­லு­ருப்பு வீக்க நோய் ஏற்­ப­டு­வ­தாக மாலை­ம­லர் நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

எனி­னும் இது­கு­றித்து மத்­திய மாநில அர­சு­க­ளி­ட­மி­ருந்து அதி­கா­ரபூர்வ தக­வல் ஏதும் வெளி­யா­க­வில்லை.

இதற்­கி­டையே, ஜூன் மாதம் முதல் குழந்­தை­க­ளுக்­கான தடுப்­பூசி பரி­சோ­த­னை­க­ளைத் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கோவாக்­சின் தயா­ரிப்­பா­ள­ரான பாரத் பயோ­டெக் இந்த பரி­சோ­த­னை­களை முத­லில் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது என மத்­திய சுகா­தார அமைச்சு தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.