உருவானது புதிய புயல் 'யாஸ்': 500,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

உருவானது புதிய புயல் 'யாஸ்': 500,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

2 mins read
04f6a41e-f67f-4bad-a792-cfe276b9e2d2
மேற்கு வங்கத்தில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தும் தேசிய பேரிடர் படைப் பிரிவினர். படம்: ஈபிஏ -

புது­டெல்லி: வங்­கக் கட­லில் உரு­வாகி உள்ள 'யாஸ்' புயல் இன்று அதி­தீ­விர புய­லாக வலுப்­பெ­றும் என இந்­திய வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது.

இந்­தப் புயல் மேற்கு வங்­கம், ஒடிசா மாநி­லங்­க­ளுக்கு இடையே நாளை மாலைக்­குள் கரை­யைக் கடக்க வாய்ப்­புள்­ள­தாக அம்­மை­யம் தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து யாஸ் புய­லால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மாநி­லங்­க­ளு­டன் உட­ன­டி­யாக மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்து பிர­த­மர் மோடி அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்தி உள்­ளார்.

முதற்­கட்­ட­மாக கரை­யோ­ரப் பகு­தி­களில் வசிக்­கும் சுமார் அரை மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்­குச் செல்­லு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த வாரம்­தான் சில இந்­திய மாநி­லங்­கள் 'டவ்தே' புயலை எதிர்­கொண்­டன. இப்­போது அடுத்த புயல் புதிய மிரட்­ட­லாக உரு­வெ­டுத்­துள்­ளது.

'யாஸ்' புயல் கரை­யைக் கடக்­கும்­போது சுமார் 185 கிலோ­மீட்­டர் வேகத்­துக்­குக் சூறைக்­காற்று வீசும் என்­றும் மிகத் தீவி­ர­மான கன­மழை பெய்­யும் என்­றும் வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

மேற்கு வங்­கத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு பள்­ளி­க­ளி­லும் அரசு அலு­வ­ல­கங்­க­ளி­லும் தற்­கா­லிக­மா­கத் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் புயல் பாதிப்பு இருப்­ப­தா­கக் கரு­தப்­படும் மேற்கு வங்­கம், ஒடிசா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளுக்­குப் பேரி­டர் மீட்­புக் குழு­வி­ன­ரும் ராணு­வத்­தி­ன­ரும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

'டவ்தே' புய­லுக்கு 155 பேர் பலி­யா­கி­யுள்ள நிலை­யில் இந்­தப் புதிய புய­லால் உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­டாத வகை­யில் உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக மேற்கு வங்க அர­சுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 'யாஸ்' புய­லால் அண்டை நாடான பங்­­ளா­தே­ஷி­லும் கன­மழை பெய்­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.