மீண்டும் நாளை நாடு தழுவிய போராட்டம்: விவசாயிகளுக்கு 12 கட்சிகள் ஆதரவு

மீண்டும் நாளை நாடு தழுவிய போராட்டம்: விவசாயிகளுக்கு 12 கட்சிகள் ஆதரவு

1 mins read
364dad25-78f8-4f11-8686-99ca04959175
-

புது­டெல்லி: புதிய வேளாண் சட்­டங்­களை மத்­திய அரசு திரும்­பப் பெற வலி­யு­றுத்தி நாளை நாடு தழு­விய போராட்­டத்­துக்கு விவ­சா­யி­கள் அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

இந்­தப் போராட்­டத்­துக்கு காங்­கி­ரஸ் உள்­ளிட்ட 12 எதிர்க்­கட்­சி­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

மே 26ஆம் தேதி­யு­டன் விவ­சா­யி­கள் தங்­கள் கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி போராட்­டங்­களில் ஈடு­பட்டு ஆறு மாதங்­கள் நிறை­வ­டை­கின்­றன.

இது­தொ­டர்­பாக காங்­கி­ரஸ் தலை­வர் சோனி­யா­காந்தி, முன்­னாள் பிர­த­மர் தேவ­க­வுடா, மாநில முதல்­வர்­க­ளான மம்தா பானர்ஜி, உத்­த­வ் தாக்­கரே, மு.க.ஸ்டா­லின் உள்­ளிட்­டோர் கூட்­டாக விடுத்­துள்ள அறிக்கை ஒன்­றில், மத்­திய அரசு தனது பிடி­வா­தப் போக்­கைக் கைவிட்டு விவ­சா­யி­க­ளு­டன் மீண்­டும் பேச்­சு­வார்த்­தை­யைத் தொடங்க வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

11 கட்­டப் பேச்­சு­வார்த்­தை­கள் தோல்வி அடைந்­து­விட்ட நிலை­யில், மாற்று வழி­க­ளைத் தெரி­வித்­தால் மட்­டுமே விவ­சா­யி­க­ளு­டன் அடுத்­த­கட்­டப் பேச்­சு­வார்த்தை நடக்­கும் என்­கி­றார் மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர்.

புதிய சட்­டங்­க­ளைத் திரும்­பப் பெறும் பட்­சத்­தில் அவற்­றுக்­கான மாற்று வழி­கள் என்ன என்­பதை விவ­சா­யி­கள் தெளி­வு­ப­டுத்­த­வேண்­டும் என அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய நரேந்­திர சிங் தோமர், விவ­சா­யி­கள் தரப்­பில் போராட்­டங்­கள் மட்­டுமே நடப்­ப­தா­க­வும் இது­வரை மாற்று வழி­கள் குறித்து எந்­த­வி­தக் கருத்­தை­யும் தெரி­விக்­க­வில்லை என்­றும் சுட்­டிக் காட்­டி­னார்.