காய்கறிகள், பழங்கள் விற்றுத் தீர்ந்தன

காய்கறிகள், பழங்கள் விற்றுத் தீர்ந்தன

1 mins read
5b2ee13c-3332-447f-a0c1-f4d0fc7ee431
-

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6,300 மெட்ரிக் டன் காய் கறிகளும் பழங்களும் விற்பனையானதாக வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 1,400 மெட்ரிக் டன், பிற மாவட்டங்களில் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன.

தமிழகம் முழுவதும் இதற்காக 13,096 வாகனங்கள் இயக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள் ளது என்றும் விவசாயிகளிடம் நேரடியாக அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.