ஊரடங்கின்போதும் ரேஷன் கடைகள் இயங்கும்

ஊரடங்கின்போதும் ரேஷன் கடைகள் இயங்கும்

1 mins read
38021e8f-6c04-4816-a779-39e716f87bde
-

சென்னை: பொது­மக்­க­ளின் நலன் கருதி ஊர­டங்கு வேளை­யி­லும் ரேஷன் கடை­கள் இயங்­கும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து மாநி­லம் முழு­வதும் நேற்று ரேஷன் கடை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டன. தமி­ழ­கத்­தில் தளர்­வு­கள் இல்லா ஊர­டங்கு அம­லில் உள்­ளது. இத­னால் பெரும்­பா­லான கடை­கள் மூடப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் ரேஷன் கடை­களைத் திறக்க முதல்­வர் ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக தமி­ழக அர­சின் உண­வுப்­பொ­ருள், பயனீட்டாளர் பாது­காப்­புத் துறை ஆணை­யர் தெரி­வித்­துள்­ளார்.

இதன்­மூ­லம் கொரோனா முதற்­கட்ட நிவா­ர­ணத் தொகையை இது­வரை பெறா­த­வர்­கள் அதை ரேஷன் கடை­களில் பெற்­றுக்­கொள்ள முடி­யும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

எதிர்­வ­ரும் 31ஆம் தேதி வரை முழு ஊர­டங்கு அம­லில் இருக்­கும் வேளை­யில் ரேஷன் கடை­கள் காலை 8 மணி முதல் மதி­யம் 12 மணி வரை இயங்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மக்­கள் வழி­காட்டு நெறி­மு­றை­க­ளை­ பின்­பற்றி ரேஷன் கடை­களில் இருந்து அத்­தி­யா­வ­சியப் பொருள்­க­ளைப் பெற்­றுச் செல்ல வேண்­டுமென பயனீட்டாளர் பாது­காப்­புத் துறை ஆணை­யர் கூறியுள்ளார்.