அமெரிக்காவில் இருந்தபடி கூலிப்படையை ஏவினார்: மனைவியைக் கொன்ற கணவர்

அமெரிக்காவில் இருந்தபடி கூலிப்படையை ஏவினார்: மனைவியைக் கொன்ற கணவர்

2 mins read
c544a6e8-ee76-41ed-9307-97d352feb257
-

திரு­வா­ரூர்: நடி­கர் சந்­தா­னத்­தின் உற­வுப் பெண் ஒரு­வரை அவ­ரது கண­வர் கூலிப்­படை வைத்து கொலை செய்­துள்­ளார்.

இதை­ய­டுத்து அமெ­ரிக்­கா­வில் உள்ள கண­வ­ரைக் கைது செய்ய போலி­சார் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

திரு­வா­ரூ­ரைச் சேர்ந்த சிதம்­ப­ரம் என்­ப­வ­ரின் மக­ளான 28 வயது ஜெய­பா­ர­திக்­கும் தஞ்­சை­யைச் சேர்ந்த 33 வய­தான விஷ்ணு பிர­கா­ஷுக்­கும் 6 ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரு­ம­ணம் நடை­பெற்­றது. விஷ்ணு பிர­காஷ் அமெ­ரிக்­கா­வில் பணி­யாற்­று­கி­றார். திரு­ம­ணத்­துக்­குப்­பின் அமெ­ரிக்­கா­வில் வசித்து வந்த இத்­தம்­ப­தி­ய­ருக்கு 3 வய­தில் பெண் குழந்தை உள்­ளது.

இந்­நி­லை­யில் கருத்து வேறு­பாடு கார­ண­மாக அமெ­ரிக்­கா­வில் இருந்து சொந்த ஊர் திரும்­பிய ஜெய­பா­ரதி, விவா­க­ரத்து கோரி விண்­ணப்­பித்­துள்­ளார். தாய் வீட்­டில் தங்கி இருந்­த­ப­டியே உள்­ளூர் தபால் நிலை­யத்­தில் தற்­கா­லிக ஊழி­ய­ரா­க­வும் பணி­யாற்­றி­னார்.

இந்­நி­லை­யில் தின­மும் இரு­சக்­கர வாக­னத்­தில் பணிக்­குச் சென்று திரும்­பும் ஜெய­பா­ரதி மீது கடந்த 21ஆம் தேதி சரக்கு லாரி ஒன்று வேக­மாக மோதி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­தார். தனது தங்­கை­யின் மர­ணத்­தில் சந்­தே­கம் இருப்­ப­தாக ஜெய­பா­ர­தி­யின் அண்­ணன் போலி­சில் புகார் அளித்­ததை அடுத்து, வழக்­கில் திருப்­பம் ஏற்­பட்­டது.

போலி­சார் நடத்­திய விசா­ர­ணை­யில் அமெ­ரிக்­கா­வில் உள்ள ஜெய­பா­ர­தி­யின் கண­வர்­தான் கூலிப்­படையை ஏவி தன் மனை­வி­யைக் கொலை செய்­தார் என்­பது அம்­ப­ல­மா­னது.

சரக்கு வாக­னத்தை ஓட்­டிய 24 வயது பிர­சன்னா, வாகன உரி­மை­யா­ளர் உள்­ளிட்ட 4 பேர் போலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து விஷ்­ணு­பி­ர­காஷ் மீது கொலை வழக்கு பதி­வாகி உள்­ளது. அவ­ரைக் கைது செய்து இந்­தி­யா­வுக்கு அழைத்­து­வர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. உயி­ரி­ழந்த ஜெய­பா­ரதி நடி­கர் சந்­தா­னத்­தின் உற­வி­னர் ஆவார்.