தமிழக அரசு: தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்தும் இந்தி தொடரை தடை செய்க

தமிழக அரசு: தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்தும் இந்தி தொடரை தடை செய்க

1 mins read
f45169e2-f613-401c-a98a-e93ce37e0299
-

சென்னை: நடிகை சமந்தா நடிப்­பில் உரு­வாகி உள்ள 'தி ஃபேமிலி மேன்-2' இந்தி இணை­யத் தொடரை இணை­யத்­தில் வெளி­யிட தடை விதிக்க வேண்­டும் என தமி­ழக அமைச்­சர் மனோ. தங்­க­ராஜ் மத்­திய அர­சி­டம் வலி­யு­றுத்தி உள்­ளார்.

அந்த இணை­யத் தொடர் ஈழத்­தமி­ழர்­களை தவ­றாக சித்­தி­ரிப்­ப­தாக மத்­திய தக­வல், ஒளி­ப­ரப்­புத் துறை அமைச்­சர் பிர­காஷ் ஜவ­டே­க­ருக்கு எழுதி உள்ள கடி­தம் ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சமூக வலைத்­த­ளங்­களில் 'தி ஃபேமிலி மேன்-2' இந்தி இணையத் தொட­ரில் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு வெளி­யாகி உள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அதில் இடம்­பெற்­றுள்ள காட்­சி­கள் இலங்­கை­யில் ஈழத்­த­மி­ழர்­க­ளின் வர­லாற்­றுச் சிறப்பு வாய்ந்த போராட்­டத்­தைக் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தா­க­வும் இழி­வு­ப­டுத்­து­வ­தா­க­வும் அமைந்­துள்­ள­தாக சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

நெடிய ஜன­நா­யக போராட்­டக் களத்­தில் ஈழத்­த­மி­ழர்­க­ளது தியா­கங்­கள் குறைத்து மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­து­டன் அது எந்த வகை­யி­லும் தமிழ்ப் பண்­பாட்­டின் பண்­பு­க­ளைக் கொண்­ட­தாக இல்லை என்று அமைச்­சர் மனோ. தங்­க­ராஜ் தெரி­வித்­துள்­ளார்.

தமிழ்ப் பண்­பாட்டை இழி­வு­படுத்­தும் கருத்­து­க­ளைக் கொண்ட இணை­யத் தொடரை எந்த வகை­யி­லும் ஒளி­ப­ரப்­புக்கு ஏற்ற மதிப்­பு­க­ளைக் கொண்­ட­தாக கருத இய­லாது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், தமிழ் பேசும் நடி­கை­யான சமந்­தாவை பயங்­க­ர­வா­தி­யாக காட்­சிப்­ப­டுத்தி இருப்­பது உல­கெங்­கி­லும் வாழும் தமி­ழர்­க­ளின் பெரு­மை­யின் மீதான நேர­டித் தாக்­கு­தல் என அவர் தெரி­வித்­துள்­ளார்.

இது­போன்ற உள்­நோக்­க­மும் விஷ­மத்­த­ன­மான பரப்­பு­ரை­யை­யும் யாரா­லும் சகித்­துக்­கொள்ள முடி­யாது என்­றும் அமைச்­சர் மனோ. தங்­க­ராஜ் தமது கடி­தத்­தில் மேலும் கூறி­யுள்­ளார்.