இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களுக்கு மருத்துவக் குழுவினர் கொரோனா தடுப்பூசி போட வந்ததால் அந்த கிராமவாசிகள் பலரும் ஓடும் நதியில் குதித்து தப்பிவிட்டனர். இந்நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு தடுப்பூசி போடும் பணியை செயல்படுத்தி வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அரசு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாஜிஸ்திரேட் தலைமையில் மருத்துவக் குழு ஒன்று உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி என்ற கிராமத்திற்கு சென்றது.
கொரோனா தடுப்பூசியை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு ஓடும் சராயு நதியில் குதித்துள்ளனர்.
"இது கொரோனா தடுப்பூசி இல்லை, இது ஒரு விஷ ஊசி," என்பது போல் அங்கு வதந்தி பரவியதன் காரணமாக மக்கள் பயந்துவிட்டனர். மேலும், அக்கிராமத்தில் 14 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

