சீக்கிய குருவான அமர் தாஸ் ஜி-யின் பிறந்தநாளையொட்டி உலகெங்கும் உள்ள சீக்கியர்கள் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் சீக்கியர்கள் பலர் மெழுகுவர்த்திகளை ஏற்றினர். அமர் தாஸ் ஜி, சீக்கியர்களின் மூன்றாவது குரு ஆவார். இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பொற்கோவிலில் அதிகமானோர் கூடவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம்: ஊடகம்

