வேளாண் சட்டங்களை எதிர்த்து கறுப்பு தினம் அனுசரிப்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து கறுப்பு தினம் அனுசரிப்பு

2 mins read
c88009c1-ce72-41b5-8459-3bdfae7c1845
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் உள்ள விவ­சா­யி­க­ளால் நேற்று கறுப்பு தினம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து விவ­சா­யி­கள் நடத்­தி­வரும் போராட்­டம் தொடங்­கப்­பட்டு நேற்­று­டன் ஆறு மாதங்­கள் நிறை­வ­டைந்­தன.

இதை­ய­டுத்து கறுப்பு தினத்தை அனு­ச­ரிக்­கு­மாறு விவ­சா­யச் சங்­கங்­கள் அழைப்பு விடுத்­தி­ருந்­தன. அதன்­படி நேற்று கறுப்பு தினத்தை அனு­ச­ரித்த விவ­சா­யி­கள், வேளாண் சட்­டங்­கள் திரும்­பப் பெறப்­ப­டும்­வரை தங்­க­ளு­டைய போராட்­டம் நீடிக்­கும் எனத் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர்.

காஸிப்­பூர், திக்ரி, சிங்கா உள்­ளிட்ட பகு­தி­களில் விவ­சா­யி­கள் நேற்று திர­ளா­கக் கூடி கறுப்­புக் கொடி­களை ஏந்தி மத்­திய அர­சுக்­கும் புதிய வேளாண் சட்­டங்­க­ளுக்­கும் எதி­ராக கண்­டன முழக்­கங்­கள் எழுப்­பி­னர். மேலும் சில தலை­வர்­க­ளின் உரு­வப் பொம்­மை­களும் எரிக்­கப்­பட்­டன.

கறுப்பு தின போராட்­டத்­தை­யொட்டி டெல்­லி­யின் எல்­லைப் பகு­தி­களில் போலி­சார் தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். ஹரி­யானா, பஞ்­சாப், உத்­த­ரப்­பி­ர­தே­சம் உள்­ளிட்ட வட இந்­திய மாநி­லங்­களில் கிரா­மப் பகு­தி­களில் உள்ள வீடு­களில் கறுப்­புக் கொடி ஏற்­றப்­பட்­டி­ருந்­தன. விவ­சா­யச் சங்­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் தங்­க­ளு­டைய வாக­னங்­க­ளி­லும் கறுப்­புக் கொடி­க­ளைக் கட்டி இருந்­த­னர்.

"வேளாண் சட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வாக உள்ள தலை­வர்­க­ளின் உரு­வப் பொம்­மை­களை எரித்து தங்­க­ளு­டைய எதிர்ப்­பைப் பதிவு செய்­துள்­ளோம். மத்­தி­யில் புதிய அரசு அமைந்து ஏழு ஆண்­டு­க­ளாகி விட்­டன. விவ­சா­யி­கள் ஆறு ஆண்­டு­க­ளா­கப் போராடி வரு­கின்­ற­னர்.

"எனி­னும் எங்­க­ளு­டைய கோரிக்­கை­களை செவி­ம­டுக்க மத்­திய அரசு மறுத்து வரு­கிறது," என்று மூத்த விவ­சா­யத் தலை­வர் அவ்­தார்­சிங் மெஹ்மா தெரி­வித்­த­தாக 'எக்க­னா­மிக் டைம்ஸ்' செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.