கறுப்பு பூஞ்சை: கேரளாவில் 45 பேர் பாதிப்பு

கறுப்பு பூஞ்சை: கேரளாவில் 45 பேர் பாதிப்பு

1 mins read
51c07c02-d41d-4d0b-873b-b928fd94ca40
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கொரோ­னா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக பொது­மக்­களை அச்­சு­றுத்தி வரும் கறுப்­புப் பூஞ்சை நோயால் கேர­ளா­வில் 45 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­நில சுகா­தார அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரி­வித்­துள்­ளார்.

இது­தொ­டர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக குறிப்­பிட்­டார்.

நாடு முழு­வ­தும் சுமார் 8 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் கறுப்­புப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

எண்­ணிக்கை அள­வில் மகா­ராஷ்­டிரா முத­லி­டத்­தில் உள்­ளது. அங்கு சுமார் 2 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில் கேர­ளா­வி­லும் கறுப்­புப் பூஞ்சை நோய் பாதிப்­புச் சம்­ப­வங்­கள் அதிக அள­வில் பதி­வாகி உள்­ள­தாக அமைச்­சர் வீணா ஜார்ஜ் கவலை தெரி­வித்­துள்­ளார். கேர­ளா­வில் கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை குறைந்து வரும் நிலை­யில் உயி­ரி­ழப்பு விகி­தம் அதி­க­ரிக்­க­வில்லை என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.