வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்றை விரட்டியடித்த கிராமம்

வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்றை விரட்டியடித்த கிராமம்

1 mins read
37ec1feb-2e32-4986-b242-63486cbcc7d7
-

மும்பை: அரசு வெளி­யிட்ட வழி­காட்டி நெறி­மு­றை­களை முறை­யா­கப் பின்­பற்­றி­ய­தால் மகா­ராஷ்­டி­ரா­வில் உள்ள ஒரு கிரா­மம் கொரோனா பிடி­யி­லி­ருந்து முழு­வ­து­மாக விடு­பட்­டுள்­ளது.

அக­மது நகர் மாவட்­டத்­தில் உள்ள 'போய­ரே­குர்த்' என்ற அந்­தச் சிறிய கிரா­மத்­தில் தற்­போது ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை.

இந்­தக் கிரா­மத்­தில் 1,500 பேர் வசிக்­கின்­ற­னர். கொரோனா தொற்­றுப் பர­வ­லால் தொடக்­கத்­தில் நான்கு பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இதை­ய­டுத்து கிரா­மப் பஞ்­சா­யத்து சார்­பில் தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டன. சுகா­தா­ரத் துறை உத­வி­யு­டன் தொற்று அறி­கு­றி­கள் உள்­ள­வர்­கள் உட­ன­டி­யா­கத் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

கிரா­மக் கோவி­லில் உள்ள ஒலி­பெ­ருக்­கி­கள் மூலம் கொவிட் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து காலை­யி­லும் மாலை­யி­லும் விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

"கிரா­மத்­தில் புதி­தாக தனி­மைப்­ப­டுத்­தும் மையத்தை அமைத்­துள்­ளோம். அறி­கு­றி­கள் உள்ளவர்­கள் இம்­மை­யத்­தில் தங்க வைக்­கப்­ப­டு­வர். வெளி­யூர் செல்­ப­வர்­கள், வெளி­யூர்­களில் இருந்து வந்து போகி­ற­வர்­கள் தீவி­ர­மா­கக் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

"அர­சாங்­கம் வலி­யு­றுத்தி உள்ள அனைத்து சுகா­தார நெறி­மு­றை­க­ளை­யும் ஊர­டங்­குக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் முறை­யா­கப் பின்­பற்­று­கி­றோம்," என்­கி­றார் இந்தக் ­கி­ரா­மத்தின் பஞ்­சா­யத்து தலை­வ­ரான ராஜேந்­திர அம்­பேத்­கர்.