கொரோனா சம்பவங்கள் 27.3 மில்லியன் தொகையை எட்ட 'கொரோனா தேவி'களிடம் கருணை வேண்டி வழிபடும் இந்திய அர்ச்சகர்கள்

கொரோனா சம்பவங்கள் 27.3 மில்லியன் தொகையை எட்ட 'கொரோனா தேவி'களிடம் கருணை வேண்டி வழிபடும் இந்திய அர்ச்சகர்கள்

1 mins read
965b9567-30a6-4cfc-bf13-c719afe627b4
படம்: ஏஃப்பி -

இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட்-19 சூழலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் காமாட்­சி­புரி ஆதீ­னம் கோயிலில் உள்ள இரண்டு தேவிகளுக்கு இந்து அர்ச்சகர்கள் தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் மொத்த கொரோனா சம்பவங்கள் 27.27 மில்லியனாகவும் இறப்புகள் 315,215 என்ற எண்ணிக்கையையும் எட்டி இருப்பதை சுகாதார அமைச்சின் தரவு தகவல் காட்டுகிறது.

அதிகரித்து வரும் கொரோனா கிருமித்தொற்றால் கோவையில் இருக்கும் இக்கோயில் பக்தர்களின் வழிபாட்டிற்காக மூடப்பட்டுள்ளது.

ஆனால் சந்தனத்தால் உருவாகிய ஒரு சிலையையும் கல்லால் உருவாகிய மற்றோரு சிலையையும் அர்ச்சகர்கள் வணங்கி வருகிறார்கள்.

உணவு உட்பட மற்ற படையல் பொருட்களையும் வைத்து மந்திரங்கள் ஓதப்படுகின்றன. மஞ்சள் நீரிலும் பாலிலும் சிலைக்கு அபி‌ஷேகம் நடைபெறுகிறது.

"முந்தைய காலத்தில் சின்னம்மை, பெரியம்மை, கொள்ளைநோயைக் குணப்படுத்துவதற்காக இதே போன்ற கோயில்கள் இருந்தது உண்டு," என்றார் கோயிலின் நிர்வாகி திரு கே.ஆனந்த்பாரதி.