டெல்லி யூடியூப் காணொளி தயாரிப்பாளர் நாயைப் பலூனில் கட்டி பறக்கவிட்ட முயற்சித்ததால் கைது செய்யப்பட்டார்

டெல்லி யூடியூப் காணொளி தயாரிப்பாளர் நாயைப் பலூனில் கட்டி பறக்கவிட்ட முயற்சித்ததால் கைது செய்யப்பட்டார்

1 mins read
667b1805-843d-49c0-80b5-87a9609ca824
படம்: ட்விட்டர் -

அவர் நாயின் முதுகில் பலூன்களை கட்டி பறக்கவிட்டதற்கு டெல்லியில் உள்ள யூடியூப் காணொளி தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

நாய் பல 'ஹீலியம்' பலூன்களை முதுகில் கட்டியவாறு தரையைவிட்டு நகர்வதை காட்டும் காணொளி ஒன்றை பதிவு செய்தார் 32 வயது திரு கௌரவ் ‌‌ஷர்மா.

யூடியூப் தளத்தில் திரு ‌‌ஷர்மாவிற்கு 4.15 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர். மே 21 ஆம் தேதி இச்சம்பவம் குறித்த முதல் காணொளியை யூடியூப் தளத்தில் பதிவிட்டார்.

பார்வையாளர்கள் அக்காணொளியைப் பற்றி குறை கூறிய பின்னர் அந்த காணொளியை அகற்றிவிட்டார் ‌‌ஷர்மா. பின்னர் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கருத்தில் கொண்டதாகக் கூறி மற்றொரு காணொளியைப் பதிவிட்டார்.

டெல்லியின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மால்வியா நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

'பீப்பல் ஃபார் அனிமல்ஸ்' என்ற அமைப்பு மால்வியா நகர் காவல் நிலையத்தில் ‌‌ஷர்மா குறித்து புகார் தெரிவித்துள்ளது.