தடுப்பூசிக்குப் பிறகு 'பூஸ்டர்' ஊசி: ஆய்வு நடப்பதாகத் தகவல்

2 mins read
a2358040-4436-410a-9cbc-321b8e700c94
-

புது­டெல்லி: எந்­தத் தடுப்­பூ­சி­யும் நூறு விழுக்­காடு பாது­காப்பு அளிக்­காது என மத்­திய நிதி ஆயோக் சுகா­தா­ரக் குழு உறுப்­பி­ன­ரான மருத்­து­வர் வி.கே.பால் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கொரோனா தடுப்­பூ­சி­களை இரண்டு தவ­ணை­கள் செலுத்­திக்­கொண்ட பிற­கும் 'பூஸ்­டர்' ஊசி ஏதே­னும் செலுத்­தப்­பட வேண்­டுமா என்­பது குறித்து ஆய்­வு­கள் நடை­பெற்று வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய 'பூஸ்­டர்' ஊசி­கள் தேவைப்­படும் பட்­சத்­தில் அது­கு­றித்து மக்­க­ளுக்கு முறைப்­படி தக­வல் தெரி­விக்­கப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், ஒரு குறிப்­பிட்ட தொற்று நோய்க்கு எதி­ராக அனை­வ­ரும் நோயெ­திர்ப்பு சக்­தி­யைப் பெற­வேண்­டி­யது அவ­சி­யம் என்­றார்.

"கோவாக்­சின் தடுப்­பூ­சியை இரு­முறை செலுத்­திக்­கொண்ட பின்­னர் 6 மாதங்­கள் காத்­தி­ருந்து பூஸ்­டர் ஊசி­யும் போட்­டுக்­கொள்ள வேண்­டுமா என்­பதை ஆராய்ந்து வரு­கி­றோம்.

எனி­னும் அதன் முடிவு தெரி­யும்­வரை மத்­திய சுகா­தார அமைச்சு கூறும் அறி­வு­ரை­களை அனை­வ­ரும் பின்­பற்ற வேண்­டும்.

"இரு­முறை தடுப்­பூ­சி­க­ளைச் போட்டுக் கொள்­வ­தன் மூலம் தடுப்­பூ­சிக்கு எதி­ரான போரில் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும். தடுப்­பூசி போட்டுக் கொண்­டால் கொரோனா கிரு­மித் தொற்­றி­லி­ருந்து பாது­காக்­கப்­ப­டு­வோம். எனி­னும் தடுப்­பூ­சியை மட்­டும் கவ­னத்­தில் கொள்­ளா­மல் நாம் கூடு­தல் கவ­னத்­து­டன் இருக்க வேண்­டி­யது அவ­சி­யம்," என்­றார் மருத்­து­வர் வி.கே. பால்.

வரும் ஜூலை மாதத்­தில் இருந்து இந்­தி­யா­வில் ஃபைசர் தடுப்­பூ­சி­கள் பயன்­பாட்­டுக்கு வர வாய்ப்­புள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், இது­கு­றித்து இரு­த­ரப்­பும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­வ­தா­கக் கூறி­னார்.

ஃபைசர் நிறு­வ­னம் இந்­தி­யா­வில் தனது தடுப்­பூ­சியை விநி­யோ­கிக்­கும் முன்­னர் உரி­மம் ­பெ­று­தல், பதப்­ப­டுத்­தும் சேமிப்­புக் கிடங்­கு­கள் அமைத்­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டி இருக்­கும் என்று குறிப்­பிட்ட அவர் ஃபைசர் நிறு­வ­னம் தங்­க­ளுக்­குக் காப்­பீ­டுப் பாது­காப்பு கோரி­யி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.