மும்பை: மகாராஷ்டிராவில் ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகும் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் அங்கு 15 மாவட்டங்களில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பூஞ்சை நோயும் மிரட்டி வரும் இவ்வேளையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கட்டுப்பாடுகளை உடனே தளர்த்துவது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்தார்.

