தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை: அதிகாரி உத்தரவால் சர்ச்சை

தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை: அதிகாரி உத்தரவால் சர்ச்சை

1 mins read
87b35fcb-0e7f-431c-ac64-6bf2b04b40b8
-

ராய்ப்­பூர்: கொரோனா தடுப்­பூசி போடா­விட்­டால் ஊதி­யம் கிடை­யாது என தமது துறை­யில் பணி­யாற்­றும் ஊழி­யர்­க­ளுக்கு அரசு அதி­காரி உத்­த­ர­விட்­ட­தாக வெளி­யான தக­வல் சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

சத்­தீஷ்­கர் மாநி­லத்­தில் பழங்­கு­டி­யி­னர் நலத்­து­றை­யில் மாவட்ட உதவி ஆணை­ய­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார் கே.எஸ்.மஸ்­ராம். இவர் அண்­மை­யில் பிறப்­பித்த உத்­த­ர­வு­தான் பல்­வேறு விவா­தங்­களை எழுப்­பி­யுள்­ளது.

மாவட்­டத்­தில் பழங்­கு­டி­யி­னர் நலத்­துறை நடத்­தும் அலு­வ­ல­கங்­கள், உறை­விட பள்­ளி­கள், விடு­தி­கள் ஆகி­ய­வற்­றில் பணி­யாற்­றும் அதி­கா­ரி­களும் ஊழி­யர்­களும் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­றும் அதற்­கான சான்­றி­தழை அலு­வ­ல­கத்­தில் சமர்ப்­பிக்க வேண்­டும் என்­றும் அண்­மை­யில் அறி­வித்­தார் மஸ்­‌ராம்.

மேலும், ஊசி போட்­டுக்­கொள்ள தவ­றும் ஊழி­யர்­க­ளுக்கு அடுத்த மாத ஊதி­யம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்­றும் அவ­ரது உத்­த­ர­வில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. யாரோ இதை சமூக வலைத்­தளத்­தில் கசி­ய­விட, சர்ச்சை வெடித்­தது. அரசு அதி­காரி ஒரு­வர் எப்­படி இவ்­வாறு உத்­த­ர­வி­ட­லாம் எனப் பலர் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தாம் பிறப்­பித்த உத்­த­ரவு குறித்து மஸ்­‌ராம் விளக்­கம் அளித்­துள்­ளார்.

பழங்­கு­டி­யி­னர் நலத்­து­றை­யில் நூறு விழுக்­காடு தடுப்­பூசி போடச்­செய்ய வேண்­டும் என்­பதே தமது நோக்­கம் என்­றும் தமது அந்த உத்­த­ர­வுக்கு பிறகு 95 விழுக்­காடு ஊழி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர் என்­றும் மஸ்­‌ராம் தெரி­வித்­துள்­ளார்.

அதே­ச­ம­யம் ஊழி­யர்­க­ளின் ஊதி­யத்தை தாம் முடக்­க­வில்லை என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் 2.83 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.