'மூலிகை மருந்து ரகசியம் கேட்டு மிரட்டல்'

'மூலிகை மருந்து ரகசியம் கேட்டு மிரட்டல்'

2 mins read
ca3811fd-b443-4fcd-8744-a38414a00298
-

நெல்­லூர்: ஆந்­தி­ரா­வில் போனஜி ஆனந்­தய்யா என்­ப­வர் கொரோனா நோயா­ளி­க­ளுக்கு மூலிகை மருந்­து­களை வழங்கி வரு­கி­றார்.

இந்த மருந்தை எடுத்­துக் கொண்­ட­வர்­கள் கொரோ­னா­வி­லி­ருந்து மீண்­டு­விட்­ட­தா­கக் கூறி­யுள்­ள­னர்.

இத­னால் அவர் வசிக்­கும் நெல்­லூர் மாவட்­டம் கிருஷ்­ணப்­பட்­டி­ணம் முத்­துக்­கூறு கிரா­மத்­தில் ஏரா­ள­மா­னோர் குவிந்து வரு­கின்­ற­னர்.

அக்­கம்­பக்­கத்­தில் இருந்து 500, 1,000 என்று கூட்­டம் கூடி­யது. ஆனால் தற்­போது அண்டை மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் படை­யெ­டுத்­துள்­ள­தால் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் அவ­ரது வீட்­டின் முன்பு தவம் கிடக்­கின்­ற­னர்.

இவர் தரும் கொரோனா மருந்து, கண்­ணில் போடக்­கூ­டிய சொட்டு மருந்­தா­கும். இந்­தச் சொட்டு மருந்து தேன், வால் மிள­கு­டன் ஒரு குறிப்­பிட்ட வகை­யான கத்­த­ரிக்­கா­யின் கூழ் ஆகி­ய­வற்­றால் தயா­ரிக்­கப்­ப­டுவதாகத் தெரி­கிறது. நெல்­லூ­ரில் ஆனந்­தய்யா தயா­ரித்த மருந்­து­கள் பாக்­கெட் ஒன்­றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை கள்ளச்சந்­தை­யில் விற்­கப்­ப­டு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஆந்­திர முதல்­வர் ஜெகன் ­மோகன் ரெட்­டி­யின் உத்­த­ர­வுக்கு இணங்க ஆனந்­தய்­யா­வின் ஆயுர்­வேத மருந்தை ஆய்வு செய்த ஆந்திர அர­சின் மருத்­துவக் குழு­வி­னர், இந்த மருந்­தால் எவ்­வித பக்க விளை­வு­களும் இல்லை என்று கூறி உள்ளனர்.

இருந்தாலும் கொரோனா நோயாளிகளை அவரது மருந்து குணப்படுத்துமா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்படு கிறது. இந்த நிலையில் மக்களி டையே கொவிட்-19 தொற்று பரவும் என்ப தால் அவரது மருந்து விநி­யோ­கம் தற்­கா­லி­க­மாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே உயர் நீதி­மன்றத்­தில் ஆனந்­தய்யா மனு ஒன்றைத் தாக்­கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அதில், "அரசு அதி­கா­ரி­கள் என்னை ரகசிய இடத்­துக்கு அழைத்துச் சென்று கொரோனா மருந்து சூத்­தி­ரத்தை கேட்டு மிரட்டுகின்றனர். அந்த மருந்தை மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்குகிறேன். ஆய்வு செய்­வதாகக் கூறி அரசு தாம­தப்­ப­டுத்­து­கிறது. விரை­வாக ஆய்வு செய்து முடிவை வெளியிட்டால் முடிந்த அளவு மருந்து தயா­ரித்து மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கு­வேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.