அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகியுள்ளதால் அனைத்துலக விமானப்போக்கு வரத்துக்கான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது. அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை இந்தத் தடை நீட்டிக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால் அனைத்துலக அளவிலான சரக்கு விமானப் போக்கு வரத்துக்கு இந்தத் தடை பொருந்தாது. 'வந்தே பாரத்' விமானச் சேவைகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனைச் சந்தித்துள்ளார் (படம்: ராய்ட்டர்ஸ்). கொவிட்-19 நிவாரணப் பணிகள், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம், ஐநா பாதுகாப்பு மன்ற விவகாரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அமெரிக்க மக்கள், அரசாங்கம் என ரூ 3,620 கோடி மதிப்பில் கொவிட்-19 நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக தினத்தந்தி குறிப்பிட்டது.
இவ்வாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி
புதுடெல்லி: இவ்வாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சர்
பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்
களிடம் பேசிய அவர், தடுப்பூசிப் போடும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உலகில் வேகமாக கொரோனா தடுப்பூசி போடும் 2வது நாடு இந்தியா." என்று குறிப்பிட்டார்.

