மருத்துவமனை தொடங்க ஐந்து ஏக்கர் நிலம் இலவசம்

மருத்துவமனை தொடங்க ஐந்து ஏக்கர் நிலம் இலவசம்

1 mins read
3ebaf590-3f61-45fd-bd51-898dde3a9c7b
-

அம­ரா­வதி: ஆந்­திர மாநி­லப் பிரி­வி­னைக்­குப் பிறகு அங்கு சிறந்த மருத்­து­வ­ம­னை­கள் அதி­க­மாக இல்லை என்று அம்­மா­நில முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி கூறி­யுள்­ளார்.

ஆந்­திர மக்­கள் சிகிச்­சைக்­காக தமி­ழ­கம், கர்­நா­டகா, தெலுங்­கானா என பிற மாநி­லங்­க­ளுக்­குச் செல்­ல­வேண்­டிய அவ­ல­நிலை ஏற்­பட்­டுள்­ளது என தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் நேற்று முன்­தி­னம் ஆய்வு மேற்­கொண்ட பிறகு அவர் குறிப்­பிட்­டார்.

ஆந்­தி­ரா­வில் தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் தொடங்க முன்­வ­ரு­வோ­ருக்கு ஐந்து ஏக்­கர் நிலம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என்­றும் முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி அறி­வித்­தார்.

" மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் 100 கோடி ரூபாய் முத­லீடு செய்து மருத்­து­வ­மனை தொடங்க முன்­வந்­தால் ஐந்து ஏக்­கர் நிலம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். மாநி­லம் முழு­வ­தும் ஆங்­காங்கே தேவைக்கு ஏற்ப 50 ஏக்­கர் நிலம் ஒதுக்­கீடு செய்­வது குறித்து முடி­வெ­டுக்­கப்­படும்," என்­றார் முதல்­வர் ஜெகன்­மோ­கன்.

ஆந்­தி­ரா­வில் உள்ள 13 மாவட்­டங்­கள், 3 மாந­க­ராட்­சி­களில் 16 இடங்­கள் தேர்வு செய்­யப்­படும் என்றும் ஒவ்வோர் இடத்­தி­லும் 50 ஏக்­கர் வரை இல­வச நிலம் மருத்துவமனைகளுக்காக ஒதுக்கீடு செய்­யப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

"ஒவ்­வொரு மருத்­துவ முனை­யத்­தி­லும் 6 முதல் 10 மருத்­து­வ­ம­னை­கள் வரை வர வாய்ப்­புள்­ளது. இது தவிர மாநி­லம் முழு­வ­தும் 16 அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளு­டன் கூடிய மருத்­து­வ­மனை­கள் தொடங்­கப்­பட உள்­ளன. இத­னால் ஆந்­திர மக்­கள் சிகிச்­சைக்­காக வேறு எங்­கும் செல்ல வேண்­டி­யது இல்லை," என்­றார் முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி.