ரெம்டெசிவிர் மருந்து: மாநில ஒதுக்கீடு நிறுத்திவைப்பு

ரெம்டெசிவிர் மருந்து: மாநில ஒதுக்கீடு நிறுத்திவைப்பு

1 mins read
33b679b5-9f59-451a-8d62-5da68563838b
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா சிகிச்­சைக்­காக பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் ரெம்­டெ­சி­விர் மருந்தை மாநி­லங்­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்­வது நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக மத்­திய இணை அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா கூறி­யுள்­ளார்.

அந்த மருந்­தின் உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளது என்­றும் தேவைக்­கும் அதி­க­மாக அது விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த ஏப்­ரல் 14ஆம் தேதி­ரெம்­டெ­சி­விர் உற்­பத்­தி­யா­னது 33 ஆயி­ரம் குப்­பி­க­ளாக இருந்­தது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், தற்­போது நாள்­தோ­றும் 350,000 குப்­பி­கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தாக கூறி­யுள்­ளார்.

மேலும், முன்பு 20 ஆலை­களில் மட்­டுமே இம்­ம­ருந்து உற்­பத்தி செய்­யப்­பட்ட நிலை­யில் அந்த எண்­ணிக்கை 60 ஆலை­க­ளாக அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார். அவ­சர தேவை­க­ளுக்­காக 50 லட்­சம் ரெம்­டெ­சி­விர் மருந்­துக் குப்­பி­களை மத்­திய அரசு கொள்­மு­தல் செய்­யும் என்­றார் அவர்.