கட்டடம் இடிந்து ஏழு பேர் பலி

மும்பையில் இரவு நேரத்தில் சோகம்

மும்பை: கட்­டட விபத்து ஒன்­றில் ஏழு பேர் பலி­யாகி இருப்­பது மும்பை பகு­தி­யில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அங்­குள்ள ஐந்து மாடிக் குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்று திடீ­ரென இடிந்து விழுந்­தது.

மும்­பையை அடுத்­துள்ள தானே மாவட்­டத்­தின் உல்­லாஸ் நக­ரில் இருந்த ஐந்து மாடிக் கட்­ட­டத்­தில் நிறைய பேர் வசித்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில் வெள்­ளிக்­கி­ழமை இரவு சுமார் 9 மணி அள­வில் அந்­தக் கட்­ட­டம் திடீ­ரென இடிந்து விழுந்­தது.

இதில் பலர் இடி­பா­டு­களில் சிக்­கிக்கொண்­ட­னர். பலர் உயி­ருக்­குப் போரா­டு­வ­தா­கக் கிடைத்த தக­வலை அடுத்து தீய­ணைப்­புப் படை­யி­னர் விரைந்து மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­ட­னர்.

அதி­காலை வரை நீடித்த மீட்­புப் பணி­யின்­போது பலர் மீட்­கப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. எனி­னும் இடி­பா­டு­களில் சிக்­கிப் படு­கா­ய­ம­டைந்த ஏழு பேரை பிண­மா­கத்­தான் மீட்க முடிந்­தது என்­றும் பலி­யா­ன­வர்­களில் ஒரு சிறு­வன், மூன்று பெண்­கள் அடங்­கு­வர் என்­றும் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர். மேலும் பலி­யான அனை­வ­ரும் இரு குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

இதற்கிடையே இடிந்து விழுந்த கட்டடம் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. எனினும் கட்டடம் முறையாக பராமரிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தை மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!