கெஜ்ரிவால்: மலிவு அரசியலுக்கு நேரமல்ல

கெஜ்ரிவால்: மலிவு அரசியலுக்கு நேரமல்ல

1 mins read
043c3d20-5fca-47bc-a514-9268d98b18bc
-

புது­டெல்லி: அனைத்து மக்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடு­வதே கொரோனா நெருக்­கடி காலத்­தில் சரி­யான நட­வ­டிக்­கை­யாக இருக்­கும் என டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

தடுப்­பூசி போடும் விவ­கா­ரத்­தில் மலி­வான அர­சி­ய­லில் ஈடு­பட இது சரி­யான நேர­மல்ல என்­றும் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் மத்­திய அர­சு­தான் தடுப்­பூ­சி­க­ளைக் கொள்­மு­தல் செய்து அவற்றை மாநி­லங்­க­ளுக்கு விநி­யோ­கிக்க வேண்­டும் என்­றும் முதல்­வர் கெஜ்­ரி­வால் வலி­யு­றுத்­தி­னார்.

நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் இயங்­கி­வ­ரும் தடுப்­பூசி மையத்தை அவர் பார்­வை­யிட்­டார். அப்­போது தடுப்­பூசி விவ­கா­ரத்­தில் தாம் யாரை­யும் குற்­றம் சொல்ல விரும்­ப­வில்லை என அவர் குறிப்­பிட்­டார்.

"தடுப்­பூசி விவ­கா­ரத்­தில் எங்கே அர­சி­யல் செய்­யப்­ப­டு­கிறது? மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி தேவை. அது எங்கே கிடைக்­கும் என்று மத்­திய அர­சு­தான் கூற­வேண்­டும். மேலும், தடுப்­பூ­சி­களை மத்­திய அர­சு­தான் மாநி­லங்­க­ளுக்கு விநி­யோ­கிக்க வேண்­டும்.

"அவற்­றைப் பெற்று மாநி­லத்­தில் உள்ள அனை­வ­ருக்­கும் நாங்­கள் வழங்­கு­வோம். கொரோனா நெருக்­க­டி­யி­லி­ருந்து மக்­க­ளைக் காப்­பாற்ற தடுப்­பூசி போடு­வது ஒன்றே தீர்வு," என்­றார் முதல்­வர் கெஜ்­ரி­வால்.

டெல்­லி­யில் புதி­தாக தொற்று பாதித்­தோர் எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 900ஆக குறைந்­துள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், பாதிப்பு விகி­தம் தொடர்ந்து குறைந்­த­படி இருந்­தால் தலை­ந­க­ரில் கூடு­தல் தளர்­வு­கள் அறி­விக்­கப்­படும் என்­றார்.

டெல்­லி­யில் இது­வரை 450 பேருக்கு கறுப்­புப் பூஞ்சை நோய் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.