காஸா தாக்குதல் தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

காஸா தாக்குதல் தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

1 mins read
2fff649f-e304-46cd-8d4c-64ee05cc03e2
-

புது­டெல்லி: காஸா தாக்­கு­தல் தொடர்­பாக விசா­ரணை நடத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­தும் தீர்­மா­னத்­தின் மீது ஐநா மன்­றத்­தில் நடை­பெற்ற வாக்­கெ­டுப்­பில் இந்­தியா பங்­கேற்­கா­மல் புறக்­க­ணித்­துள்­ளது.

47 நாடு­களை உறுப்­பி­னர்­க­ளா­கக் கொண்­டுள்ள ஐநா மனித உரிமை மன்­றத்­தின் ஜெனீ­வா­வில் உள்ள தலை­மை­ய­கத்­தில் வியா­ழக்­கி­ழமை அன்று தீர்­மா­னத்­தின் மீதான வாக்­கெ­டுப்பு நடை­பெற்­றது.

இந்த மன்­றத்­தில் இடம்­பெற்­றுள்ள இஸ்­லா­மிய உறுப்பு நாடு­கள் சார்­பில் கொண்டு வரப்­பட்ட இந்த தீர்­மா­னத்தை இந்­தியா உள்­ளிட்ட 13 உறுப்பு நாடு­கள் புறக்­க­ணித்­தன. அதே சம­யம் சீனா, ரஷ்யா உள்­ளிட்ட 24 நாடு­கள் தீர்­மா­னத்தை ஆத­ரித்­துள்­ளன. இத­னால் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

"கிழக்கு ஜெரு­ச­லம் உட்­பட ஆக்­கி­ர­மிப்பு பாலஸ்­தீன பகு­தி­கள், இஸ்­ரே­லில் அனைத்­துல மனித உரி­மைச் சட்­டங்­கள், அனைத்­து­லக மனி­தா­பி­மான சட்­டங்­கள் மதிக்­கப்­படு­வது உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­று ஐநா மனித உரிமை மன்­றம் குறிப்­பிட்­டுள்­ளது.