கொரோனா தாக்கத்தால் 10 மி. பேர் வேலை இழந்தனர்

கொரோனா தாக்கத்தால் 10 மி. பேர் வேலை இழந்தனர்

2 mins read
b07d0d22-9a42-4d40-8b4c-f4dc11419bb4
-

புது­டெல்லி: கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கத்­தால் நாடு முழு­வ­தும் சுமார் 10 மில்­லி­யன் பேர் வேலை இழந்­தி­ருப்­ப­தாக அண்­மைய ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

மேலும், 97 விழுக்­காடு குடும்­பங்­கள் வரு­மான இழப்பை சந்­தித்­துள்­ள­தாக இந்த ஆய்வை மேற்­கொண்ட இந்­தி­யப் பொரு­ளா­தார கண்­கா­ணிப்பு மையம் தெரி­வித்­துள்­ளது.

நாட்­டில் வேலை­யி­ழப்பு விகி­தம் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் புதிய வேலை­வாய்ப்­பு­கள் எது­வும் உரு­வா­க­வில்லை என்­றும் அந்த மையத்­தின் தலை­வர் மகேஷ் வியாஸ் தெரி­வித்­துள்­ளார். கடந்த ஏப்­ரல் மாத இறு­தி­யில் 8 விழுக்­கா­டாக இருந்த வேலை­யி­ழப்பு விகி­தம் மே மாதம் 12 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது என்று அவர் கூறி­யுள்­ளார்.

"முந்­தைய நிலையை ஒப்­பிட்­டால் 97 விழுக்­காடு குடும்­பங்­களில் வரு­வாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. இது பல்­வேறு தரப்­பி­ன­ருக்கு வெவ்­வேறு வித­மாக உள்­ளது. ஊர­டங்கு வேளை­யில் தினக்­கூலி வாங்­கும் தொழி­லா­ளர்­களும் சிறு தொழில் வர்த்­தக நிறு­வ­னங்­களில் பணி­யாற்­று­ப­வர்­க­ளும்­தான் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"புலம்­பெ­யர்ந்த தொழி­லா­ளர்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பு­வ­தால், வேலை­யின்மை விகி­தம் மேலும் அதி­க­ரிக்­கும். அத­னால் நகர்ப்­பு­றங்­களில் வேலை­யின்­மை­யின் தாக்­கம் கடு­மை­யாக இருக்­கும்," என்று மகேஷ் வியாஸ் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி கடந்த 40 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு கடும் வீழ்ச்சி அடைந்­துள்­ளது என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

2020-21ஆம் நிதி­யாண்­டில் நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி 7.3 விழுக்­கா­டாக சரிந்­துள்­ளது என்­றும் நான்­காம் காலாண்­டில் 1.6% உயர்ந்துள்­ளது சற்று ஆறு­த­லாக அமைந்­துள்­ளது என்­றும் பொரு­ளா­தார நிபு­ணர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். 2020 ஜூலை மாதம் ஊர­டங்கு தளர்­வு­களை மத்­திய அரசு அறி­விக்­கத் தொடங்­கி­யதை அடுத்து பொரு­ளா­தா­ரம் மீண்­டும் படிப்­ப­டி­யாக ஏற்­றம் காணத் தொடங்­கி­யுள்­ளது என அவர்­கள் சுட்­டிக் காட்­டு­கின்­ற­னர்.