தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.86,000 கோடியில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம்

2 mins read
ae00432e-a326-4a5d-a7e6-6b4080edb604
-

ஆந்திரா ஆதரவு; தெலுங்கானா, கர்நாடகா முட்டுக்கட்டை

புது­டெல்லி: தமி­ழ் நாட்டின் நீண்ட நாள் கன­வான கோதா­வரி நதியை காவி­ரி­யு­டன் இணைக்­கும் திட்­டத்­துக்கு தேசிய நதி­நீர் மேம்­பாட்டு அமைப்பு (என்­ட­பிள்­யு­டிஏ) ஒப்­பு­தல் வழங்கி, இதற்­கான திட்ட அறிக்­கையை சம்­பந்­தப்­பட்ட சத்­தீஸ்­கர், தெலுங்­கானா, ஆந்­திரா, தமி­ழ­கம் மற்­றும் கர்­நா­டக மாநி­லங்­க­ளுக்கு அனுப்­பி­யுள்­ளது.

சுரங்­கப்­பா­தை­யு­டன் மொத்­தம் 1,211 கி.மீ., தூரம் வரை கால்­வாய் தோண்டி இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இதற்­காக 2020-21 வரு­வாய் ஆண்­டில் ரூ.85,962 கோடி­ செ­ல­வா­கும் என மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டத்­துக்கு தமி­ழ­கத்­துக்கு உதவ ஆந்­திர மாநி­லம் முன்­வந்­துள்ள நிலை­யில், தெலுங்­கா­னா­வும் கர்­நா­ட­கா­வும் முட்­டுக்­கட்டை போட்டு வரு­கின்­றன.

இழு­ப­றி­யாக இருந்து வந்த கோதா­வரி-காவிரி நதி­நீர் இணைப்புத் திட்­டத்­துக்கு மத்­திய அரசு பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ளது. இதன் மூலம் தமி­ழ­கத்­தில் குடி­நீர் தேவை பூர்த்­தி­யா­வ­து­டன் வேளாண்மை மற்­றும் தொழில் துறை­கள் வளர்ச்சி அடைய உள்­ளன. இதன்­படி, தெலுங்­கானா மாநி­லம், ஜெய்­சங்­கர் பூபா­ல­பள்ளி மாவட்­டம், மகா­தே­வ­பு­ரம் மண்­ட­லத்­தில் உள்ள ஈச்­சம்­பள்­ளி­யில் உள்ள கோதா­வரி நதி மீது அணைக்­கட்டு கட்டி, தமி­ழ­கத்­தின் காவிரி நதி­யின் குறுக்கே அமைந்­துள்ள கல்­லணை வரை உள்ள மொத்­தம் 1,211 கி.மீ., தூரம் வரை இந்த நதி­நீர் இணைப்புத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இதில் 19 கி.மீ., தூரம் சுரங்கப் பாதையும் அடங்­கும். வழி­யில் 1,088 சைபர் கால்­வாய்­கள் கட்­டப்­பட உள்­ளன.

இத் திட்­டம் ஈச்­சம்­பள்­ளி­யில் இருந்து தெலுங்­கானா மாநி­லத்­தின் நாகார்­ஜுன சாகர் அணைக்­கட்டு வரை நதி­நீரை திசை திருப்ப மூன்று இடங்­களில் தூக்­கு­விசை முறை நிர்­மா­ணிக்­கப்­பட உள்­ளது. இதைக் கட்ட 3,845 மில்­லி­யன் யூனிட் மின்­சா­ரம் அவ­சி­யம். மின்­சாரச் செலவு ரூ.769 கோடி என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 366 மில்­லி­யன் யூனிட் உற்­பத்தி செய்­யக்­கூடிய நீர் மின் உற்­பத்தி மையங்­கள் கட்­டப்­ப­டு­கின்­றன.

ஈச்­சம்­பள்ளி அருகே கட்­டப்­படும் அணைக்­கட்­டால், அப்­ப­கு­தி­யில் உள்ள 9,306 ஹெக்­டேர் நிலம் தாழ்­வான பகு­தி­யாக மாற்­றப்­படும். இத­னால், தண்­ணீர் சூழும் அபா­யம் உள்­ள­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், அந்த இடம் நதிக்கு சொந்­த­மா­னது என்­றும், இவை சில­ரால் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.