வாஷிங்டன்: சீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு முன்னாள் அதிபர் டிரம்ப் ஏற்படுத்திய கறுப்புப் பட்டியலை பைடன் நிர்வாகம் விரிவுபடுத்தி உள்ளது. பத்துக்கு மேற்பட்ட சீன நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது என அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் நேற்று தடை விதித்தார்.
இது குறித்து விளக்கிய வெள்ளை மாளிகை, "அமெரிக்காவின் நன்மதிப்பை அல்லது பாதுகாப்பைக் கீழறுக்கும் சீனாவுக்கு ஆதரவாக முதலீடு செய்ய அமெரிக்கா அனுமதிக்காது," என்றது.

