தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உதவிப் பொருள்களைத் திருடியதாக மேற்கு வங்க பாஜக தலைவர், சகோதரர் மீது புகார்

1 mins read
6cdcafeb-5c27-4b61-add5-99e24231acd4
-

கோல்­கத்தா: பல லட்ச ரூபாய் மதிப்­பி­லான உத­விப் பொருள்­களைத் திரு­டி­ய­தாக மேற்கு வங்க மாநில பாஜக தலை­வர் சுவேந்து அதி­காரி மீதும் அவ­ரின் சகோ­த­ரர் மீதும் போலி­சில் வழக்கு பதி­யப்­பட்­டுள்­ளது.

பூர்ப மேதி­னிப்­பூர் மாவட்­டம், காந்தி நக­ராட்சி அலு­வ­ல­கத்­தில் இருந்து அவர்­கள் அப்­பொ­ருள்­களைக் கள­வா­டிச் சென்­ற­தாக நக­ராட்சி மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் போலி­சில் புகார் அளித்­த­தைத் தொடர்ந்து, வழக்கு பதி­யப்­பட்­டது.

உத­விப் பொருள்­க­ளைப் பதுக்கு­வ­தாக திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் மீது பாஜ­க­வினர் தொடர்ந்து குற்­றஞ்­சாட்டி வரும் நிலை­யில், இப்­போது அதே புகா­ரில் சட்­ட­மன்ற எதிர்­கட்­சித் தலை­வர் சுவேந்து அதி­காரி சிக்­கி­யுள்­ளார்.

தங்­க­ளது பாது­காப்­புக்­காக பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள மத்­திய ஆயு­தப் படை­யி­ன­ரைக் கொண்டு பாஜக தலை­வர்­கள் உத­விப் பொருள்­க­ளைக் கள­வா­டி­ய­தாக போலிஸ் புகா­ரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தம் மீதான புகா­ருக்கு சுவேந்து அதி­காரி இன்­னும் பதில் அளிக்­க­வில்லை.

கடந்த நவம்­பர் வரை திரி­ணா­மூல் கட்சி சார்­பில் மத்­திய அமைச்­ச­ராக இருந்த சுவேந்து அதி­காரி, பின்­னர் அக்­கட்­சி­யி­ல் இ­ருந்து விலகி, பாஜ­க­வில் இணைந்­தார். அண்­மை­யில் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்டியிட்ட அவர், தம்மை எதிர்த்­துக் களம் கண்ட முதல்­வர் மம்தா பானர்ஜியை 1,200 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.