முக்கிய நகரங்களில் தொழில் நடவடிக்கைகள் தொடங்கின

முக்கிய நகரங்களில் தொழில் நடவடிக்கைகள் தொடங்கின

2 mins read
a247be37-9854-48eb-a7d0-f4eb053b61bb
-

61 நாட்களுக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவு

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் கொரோனா தொற்­றுப் பாதிப்பு குறைந்­து­வ­ரும் நிலை­யில் இந்­தி­யா­வில் முக்­கிய நக­ரங்­களில் வர்த்­தக, தொழில் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொடங்கி உள்­ளன.

மும்பை, டெல்லி உள்­ளிட்ட நக­ரங்­களில் நேற்று சாலைப் போக்­கு­வ­ரத்து வழக்­கம்­போல் இருந்­தது. மும்­பை­யில் பேருந்து சேவை­கள் தொடங்கி உள்­ளன. இதே­போல் டெல்­லி­யில் மெட்ரோ ரயில்­கள் இயங்­கத் தொடங்­கின.

கடந்த 24 மணி நேரத்­தில் நாடு முழு­வ­தும் 100,636 பேரை கிருமி தொற்­றி­யுள்­ளது. கடந்த 61 நாட்­களில் பதி­வான ஆகக் குறை­வான தொற்று எண்­ணிக்கை இது­வா­கும்.

கடந்த ஏப்­ரல் 6ஆம் தேதி வரை நாள்­தோ­றும் 4 லட்­சம் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வந்­தன. இதை­ய­டுத்து ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்டு பல மாநி­லங்­களில் கடும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன.

இந்­நி­லை­யில் இரண்டு மாத போராட்­டத்­துக்­குப் பிறகு தொற்று விகி­தம் குறை­யத் தொடங்கி உள்­ளது.

"கிரு­மித்­தொற்­றில் இருந்து நம்மைப் பாது­காத்­துக்கொள்ள வேண்­டும். அதே­ச­ம­யம் பொரு­ளா­தா­ரத்­தை­யும் மீண்­டும் சரி­யான பாதை­யில் கொண்டு செல்ல வேண்­டும்," என டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் உள்ள கடை­கள் இரண்­டா­கப் பிரிக்­கப்­பட்டு சுழற்சி முறை­யில் ஒரு­நாள் விட்டு ஒரு­நாள் இயங்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வே­ளை­யில் அலு­வ­ல­கங்­கள் இயங்­க­வும் 50 விழுக்­காடு பய­ணி­க­ளு­டன் மெட்ரோ ரயில்­களை இயக்­க­வும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும் உண­வ­கங்­கள், திரை­ய­ரங்கு­கள், உடற்­ப­யிற்சிக் கூடங்களை மூடு­வது உள்­ளிட்ட கட்­டுப்­பா­டு­கள் நீடிக்­கின்­றன.

கடந்த 24 மணி நேரத்­தில் இந்­தி­யா­வில் மேலும் 2,427 பேர் கிரு­மித்­தொற்­றால் பலி­யாகி உள்­ள­னர். கடந்த ஏப்­ர­லில் தினந்­தோ­றும் 4 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் இறந்த நிலை­யில் இப்­போது இறப்­போர் எண்­ணிக்­கை­யும் ஓர­ளவு குறைந்­துள்­ளது.

இதே­வே­ளை­யில் பாதிக்­கப்­பட்­டோர், உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை இதை­விட பல மடங்கு அதி­க­மாக இருக்­க­லாம் என்று நிபு­ணர்­கள் கூறு­வ­தாக 'ஸ்ட்­ரெ­யிட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் மும்பை உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்­களில் அனைத்து வணி­கங்­களும் தொழில்­களும் நண்­ப­கல் வரை செயல்­ப­ட­லாம் என்­றும் 50 விழுக்­காடு ஊழி­யர்­க­ளு­டன் அலு­வ­ல­கங்­கள் இயங்­க­லாம் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டெல்­லி­யைப் போலவே மகா­ராஷ்­டி­ரா­வி­லும் உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள் சிகை­ய­லங்­கா­ரக் கடை­கள், திரை­ய­ரங்­கு­கள், வணிக வளா­கங்­கள் தொடர்ந்து மூடப்­பட்­டுள்­ளன.

இந்­தி­யா­வின் 1.4 பில்­லி­யன் குடி­மக்­க­ளுக்குத் தடுப்­பூசி போடு­

வ­தில் அதி­கா­ரி­கள் பல சவால்­களை எதிர்­கொண்­டுள்ள நிலை­யில் கொரோனா மூன்­றா­வது அலை­யால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வதே தற்­போ­துள்ள ஒரே வழி என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் பல மில்­லி­யன் மக்­கள் தினக்­கூலி பெற்று தங்­க­ளுக்­கு­ரிய உணவை வாங்கு­கின்­ற­னர், தங்­கு­மி­டத்­துக்­கான வாட­கை­யைச் செலுத்­து­கின்­ற­னர். எனவே அனைத்து பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களை மீண்­டும் துவங்க வேண்­டும் என்­ப­தற்­கான அழுத்­தம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

வட­மா­நி­லங்­களில் சுமார் ஒன்­றரை மாதங்­க­ளுக்­குப் பிறகு பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் துவங்கி இருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.