ஆதரவற்ற நிலையில் 30,000 குழந்தைகள்

2 mins read
6b6c563f-0a6e-4602-a18b-4becd6de88a9
-

பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்து

புது­டெல்லி: கிரு­மித்­தொற்­றால் பெற்­றோர் உயி­ரி­ழக்­கும் போது பாதிக்­கப்­படும் சிறு­வர்­க­ளின் நிலைமை குறித்து தேசிய குழந்­தை­கள் உரிமை பாது­காப்பு ஆணை­யம் (என்­சி­பி­சி­ஆர்) உச்ச நீதி­மன்­றத்தில் சில தக­வல்­

க­ளைக் கூறி­யுள்ளது.

''2020 ஏப்­ரல் முதல் 2021 ஜூன் 5 வரை­யி­லான கணக்­கெ­டுப்­புப்­படி கொரோனா கிரு­மித்­தொற்­றால் 30,071 சிறார்­கள் தங்­க­ளது தாயையோ தந்­தை­யையோ அல்­லது இரு­வ­ரை­யுமோ இழந்­துள்­ள­னர். இவர்­களில் 15,620 பேர் சிறு­வர்­கள், 14,447 சிறு­மி­கள், 4 பேர் மூன்­றாம் பாலி­னத்­த­வர்­கள். 3,621 சிறார் தங்­க­ளது பெற்­றோர் இரு­வ­ரை­யுமே இழந்­துள்­ள­னர். 274 சிறு­வர்­கள் அநா­தை­க­ளாக விடப்­பட்­டுள்­ள­னர்," என்று ஆணை­யம் கூறி­யது.

இவ்­வாறு ஆத­ர­வற்ற குழந்­தை­களை தத்­தெ­டுப்­பது சட்ட விரோ­த­மா­னது என்­றும் இதை தடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் உச்ச நீதி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது. இவ்­வ­ழக்கு திங்­கட்­ கிழமை உச்ச நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு வந்­தது.

தேசிய குழந்­தை­கள் உரிமை பாது­காப்பு ஆணை­யம் சார்­பில் வாதா­டிய மத்­திய அர­சின் கூடு­தல் தலைமை வழக்­க­றி­ஞர் கே.எம்.நட­ராஜ், "தத்­தெ­டுப்­பது தொடர்­பாக மத்­திய அரசு உரு­வாக்கி உள்ள நடை­மு­றை­க­ளுக்கு பின்­னரே குழந்­தை­களை தத்­தெ­டுப்­பது சட்­ட­பூர்­வ­மா­ன­தாக இருக்­கும். இந்த நடை­மு­றை­களை பின்­பற்­றா­மல் தத்­தெ­டுத்­தால் அது செல்­லாது," என்­றார்.

பின்­னர் நீதி­ப­தி­கள் எல். நாகேஸ்­வ­ர­ராவ், அனி­ருத்தா போஸ் ஆகி­யோர் கொண்ட அமர்வு, ''ஆத­ர­வற்ற குழந்­தை­கள் சட்டவிரோ­த­மாக தத்­தெ­டுக்கப் படுவதைத் தடுக்க இவ்விவ­கா­ரத்­தில் உச்ச நீதி­மன்­றம் தலை­யி­டும். ஆத­ர­வற்ற குழந்­தை­க­ளின் பாது­காப்பு உறுதி செய்­யப்­ப­டு­வ­தோடு அவர்­க­ளது எதிர்­கா­லம் காக்­கப்­பட வேண்­டும். சட்­ட விரோ­த­மாகத் தத்­தெ­டுப்­பதைத் தடுக்க தேவை­யான உத்­த­ர­வு­களை உச்ச நீதி­மன்­றம் விரை­வில் பிறப்­பிக்­கும்,'' என்று கூறியது.