விவசாயிகளுடன் பேச நிபந்தனை விதித்த அமைச்சர் தோமர்

விவசாயிகளுடன் பேச நிபந்தனை விதித்த அமைச்சர் தோமர்

1 mins read
f52d7ceb-6239-442c-b360-be25d8edf254
-

குவா­லி­யர்: வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்­பப் பெற­வேண்­டும் எனும் கோரிக்­கை­யைக் கைவிட்­டால் மட்­டுமே விவ­சா­யி­க­ளு­டன் அடுத்­தக்­கட்ட பேச்­சு­வார்த்­தையை நடத்த இய­லும் என மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­தி­ர­சிங் தோமர் தெரி­வித்­துள்­ளார்.

விவ­சா­யி­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கக்­கூ­டிய மாற்­று­வ­ழி­களை முன்­வைத்­தால் அது­கு­றித்­துப் பேச்­சு­வார்த்தை நடத்த அர­சாங்­கம் தயார் என்று குவா­லி­ய­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறினார்.

"எண்­ணெய்­யில் கலப்­ப­டம் செய்­வதை மத்­திய அரசு தடுத்து நிறுத்தி உள்­ளது. அதன் கார­ண­மா­கவே கடுகு எண்­ணெய் விலை அதி­க­ரித்­துள்­ளது. இந்த நட­வ­டிக்கை விவ­சா­யி­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கும்," என்­றார் அமைச்­சர் தோமர்.

விவ­சா­யி­க­ளின் நலன் குறித்து தான் மத்­திய அரசு எப்­போ­தும் யோசிக்­கிறது என்று குறிப்­பிட்ட அவர், போரா­டும் விவ­சா­யி­கள் இதை யோசித்துப் பார்க்க வேண்­டும் என்­றார்.

"புதிய வேளாண் சட்­டங்­கள் தொடர்­பான விவ­சா­ய­க­ளின் கோரிக்­கை­கள் ஏற்­கெ­னவே ஏற்­கப்­பட்­டு­விட்­டன," என்­றார் அமைச்­சர் நரேந்திர சிங் தோமர்.