சில வாரங்களில் மெகுல் இந்தியா வருவார்

1 mins read
771ea9bb-d963-4dc4-8b9f-4be727e5b855
-

புது­டெல்லி: வங்கி மோசடி வழக்­கில் தேடப்­பட்டு வரும் தொழி­ல­தி­பர் மெகுல் சோக்சி அடுத்த சில வாரங்­களில் இந்­தி­யா­வுக்கு அழைத்து வரப்­ப­டு­வார் என்று மூத்த வழக்­க­றி­ஞர் ஹரிஷ் சால்வே தெரி­வித்­துள்­ளார்.

டொமி­னிக் நாட்­டில் பின்­பற்­றப்­படும் விதி­மு­றை­கள் குறித்து தமக்குத் தெரி­யாது என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

எனி­னும் சில மாதங்­கள் அல்­லா­மல் சில வாரங்­க­ளுக்­குள் மெகுல் சோக்­சியை இந்­தி­யா­வுக்கு அழைத்து வர­மு­டி­யும் என எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறி­யுள்­ளார்.

மெகுல் சோக்சி வழக்­கில் ஹரிஷ் சால்­வே­யின் உத­வியை இந்­திய அரசு கோரி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.