புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூன் 11ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பெட்ரோல் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அண்மைய சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது.
அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதே இந்தியாவிலும் விலை உயர்வுக்குக் காரணமாகிவிட்டது என இந்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் நிலையங்க ளில் பணம் செலுத்தும்போது பொதுமக்களால் பிரதமர் மோடி அரசின் பணவீக்க உயர்வை உணர முடியும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

