மும்பையில் இரண்டு மாடிக்கட்டடம் இடிந்து விபத்து; 11 பேர் பலி

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் மீண்­டும் ஒரு கட்­ட­டம் இடிந்து விழுந்த சம்­ப­வத்­தில் எட்டு குழந்­தை­கள் உட்­பட 11 பேர் உயி­ரி­ழந்து விட்­ட­தாக மும்பை போலி­சார் தெரி­வித்­த­னர்.

மும்­பை­யில் தற்­போது தென்­மேற்கு பருவ மழை தொடங்கி விட்­டது. இத­னால் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கடந்த இரு தினங்­க­ளாக கன­மழை நீடித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் மும்பை மாந­க­ரின் மேற்­குப் பகு­தி­யான மாலட்­டில் நேற்று குடி­யி­ருப்­புப் பகுதி ஒன்­றில் 2 மாடிக் கட்­ட­டம் திடீ­ரென இடிந்து விழுந்து விபத்­துக்­குள்­ளா­னது.

கட்­டட இடி­பா­டு­களில் சிக்கி 11 பேர் பலி­யாகி விட்­ட­னர். தக­வல் அறிந்து விரைந்து வந்த மீட்­புப் படை­யி­னர் 11 பேரின் உடல்­களை மீட்­ட­னர். துரி­த­க­தி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட மீட்பு நட­வ­டிக்­கை­யால் இடி­பா­டு­க­ளுக்கு இடையே சிக்­கி­யி­ருந்த 8 பேரை உயி­ரு­டன் மீட்க முடிந்­தது.

படு­கா­ய­ம­டைந்­துள்ள அவர்­கள் அரு­கில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். இடிந்து விழுந்­தது இரண்டு மாடிக் குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் என்­ப­தால் இடி­பா­டு­களில் மேலும் சிலர் சிக்­கி­யி­ருக்­க­லாம் என அஞ்­சப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து தீவிர மீட்­புப் பணி­கள் முடுக்கி விடப்­பட்­டன. விபத்து பகு­தியை மகா­ராஷ்­டிர மாநில அமைச்­சர் அஸ்­லாம் ஷைக் பார்­வை­யிட்டு ஆய்வு மேற்­கொண்­டார்.

மும்­பை­யில் தீவி­ர­ம­டை­யும்

பரு­வ­மழை

மகா­ராஷ்­டிர தலை­ந­கர் மும்­பை­யில் பரு­வ­மழை தீவி­ர­ம் அடைந்து வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் பெய்த இடை­வி­டாத மழை கார­ண­மாக மாந­க­ரின் பல பகு­தி­களில் மழை­நீர் வெள்­ளம் போல் தேங்­கி­யது.

இத­னால் போக்­கு­வ­ரத்து முடங்­கி­யுள்­ளது. இரு­ சக்­கர வாக­ன­மோட்­டி­கள் சாலை­களில் தேங்­கி­யுள்ள மழை­நீரை கடந்து செல்ல முடி­யா­மல் தத்­த­ளித்­த­னர். பல வாக­னங்­க­ளுக்­குள் மழை­நீர் புகுந்­த­தால் அவை பழு­த­டைந்து சாலை­யின் நடுவே நின்­றன.

இந்த வாக­னங்­கள் கிரேன்­கள் மூலம் அகற்­றப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. மும்பை மக்­கள் தேவை­யின்றி வீடு­களை விட்டு வெளியே செல்­வ­தைத் தவிர்க்­க­வேண்­டும் என காவல்­துறை கேட்­டுக் கொண்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!