பாஜகவில் ஜிதின்: காங்கிரசுக்குப் பின்னடைவு

பாஜகவில் ஜிதின்: காங்கிரசுக்குப் பின்னடைவு

1 mins read
47e785e3-54be-43a6-b536-9334cae947d4
-

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தேச காங்­கி­ரஸ் கட்­சி­யின் முக்­கி­யத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான ஜிதின் பிர­சாதா திடீ­ரென பாஜ­க­வில் இணைந்­துள்­ளார்.

இத­னால் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் காங்­கி­ரஸ் கட்­சிக்­குப் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த பல மாதங்­க­ளாக கட்­சித் தலைமை மீது கடும் அதி­ருப்­தி­யில் இருந்து வந்­தார் ஜிதின் பிர­சாதா. கடந்த ஆண்டு காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில்­சி­பல் உள்­ளிட்ட 23 பேர் இணைந்து கட்சி மேலி­டத்­துக்­குக் கடி­தம் எழு­தி­னர். அவர்­களில் ஜித்­தின் பிர­சா­தா­வும் ஒரு­வர்.

காங்­கி­ரஸ் கட்­சிக்­குள் பெரும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யது அக்­ கடி­தம். பிர­த­மர் ராஜீவ் காந்­தி­யின் அர­சி­யல் ஆலோ­ச­க­ரா­கப் பணி­யாற்­றிய ஜிதேந்­திர பிர­சாத்­தின் மக­னான ஜிதின் பிர­சாதா, ராகுல் காந்­தி­யின் நெருங்­கிய நண்­பர்­களில் ஒரு­வ­ரா­வார்.

இந்­நி­லை­யில் கட்சி மேலி­டத்­துக்கு கடி­தம் எழு­திய பிற­கும் கட்சி அமைப்­பில் எந்­த­வித மாற்­றங்­களும் ஏற்­ப­டா­த­தால் தம்மை பாஜ­க­வில் இணைத்­துக் கொண்­டுள்­ளார் ஜிதின். அடுத்த ஆண்டு உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது.

இந்­நி­லை­யில் ஜிதின் கட்சி மாறி­யி­ருப்­பது காங்­கி­ர­சுக்­கு பெரும் பின்­ன­டை­வாக இருக்­கும் என அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர். இதற்­கி­டையே மேற்கு வங்க மாநி­லத்­தில் திரி­ணா­மூல் கட்­சி­யில் இருந்து விலகி பாஜ­க­வில் இணைந்த சில தலை­வர்­கள் மீண்­டும் முதல்­வர் மம்தா கட்­சி­யில் இணைய முன்­வந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.