ஆந்திராவில் கறுப்புப் பூஞ்சை நோயால் 1,955 பேர் பாதிப்பு; 114 பேர் மரணம்

அம­ரா­வதி: ஆந்­தி­ரா­வில் கறுப்­புப் பூஞ்சை நோயால் 1,955 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து அனைத்து அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் இந்­நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக அம்­மா­நில மருத்­துவ, சுகா­தார முதன்­மைச் செய­லா­ளர் அனில்­குமார் சிங்­கால் தெரி­வித்­துள்­ளார்.

நாடு முழு­வ­தும் கறுப்­புப் பூஞ்சை நோயின் தாக்­கம் அதி­க­ரித்து வரு­கிறது. தென் மாநி­லங்­க­ளி­லும் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஆந்­தி­ரா­வில் இது­வரை 114 பேர் பூஞ்சை நோய்க்­குப் பலி­யாகி விட்­ட­னர். தற்­போது 1,301 பேருக்கு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இதற்­கி­டையே மகா­ராஷ்­டி­ரா­வைச் சேர்ந்த நவீன்­பால் என்­ப­வர் கறுப்­புப் பூஞ்சை நோயி­லி­ருந்து சிகிச்சை பெற்று மீள ஒன்றரை கோடி ரூபாய் செல­விட்­டுள்­ளார்.

46 வய­தான இவர்­தான் மகா­ராஷ்­டி­ரா­வில் கறுப்­புப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்ட முதல் நோயாளி ஆவார்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­காக சிகிச்சை பெற்று நல­மு­டன் வீடு திரும்­பி­னார் நவீன்­பால். அதன்­பி­றகு திடீ­ரென பூஞ்சை நோய் இவரை தாக்கியது. உரிய நேரத்­தில் சிகிச்சை பெறா­த­தால் நோயின் கடுமை அதி­க­ரித்­து, தமது இரு கண்­க­ளையும் பறி­கொ­டுத்­த­து­டன் சிகிச்சை செல­வாக ஒன்றரை கோடி ரூபாய் அளவு செல­வும் செய்­துள்­ளார் நவீன் பால். அவ­ரது முகத்­தில் இது­வரை 13 அறு­வை சிகிச்­சை­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவ­ரது மனைவி ரயில்வே ஊழி­யர் என்­ப­தால் அத்­துறை ஒரு கோடி ரூபாயை சிகிச்­சைக்­காக அளித்­துள்­ளது.

மீதிப் பணத்தை நவீன்­பால் குடும்­பத்­தார் செல­விட்­டுள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!