உலகளவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 6,148 பேர் பலி

பீகாரில் தொற்று, மரண எண்ணிக்கையை மறு தணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் 6,148 பேர் கொரோனா கிரு­மித் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். இது இந்­தி­யா­வில் மட்­டு­மல்­லா­மல் உல­க­ள­வில் பதி­வான அன்­றாட மரண எண்­ணிக்­கை­யில் ஆக அதி­க­மா­கும்.

அண்­மைய சில தினங்­க­ளாக நாடு முழு­வ­தும் புதிய தொற்­று­க­ளின் எண்­ணிக்கை மெல்ல குறைந்து வரு­கிறது.

நேற்று காலை வரை­யி­லான நில­வ­ரப்­படி, முந்­தைய 24 மணி நேரத்­தில் இந்­தி­யா­வில் 6,148 பேர் மாண்­டு­விட்­ட­னர். இதற்­கு ­முன்பு உல­க­ள­வில் ஒரே­நா­ளில் பதி­வான அன்­றாட மர­ணச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்­கை­யில் அமெ­ரிக்கா முத­லி­டத்­தில் உள்­ளது. அங்கு கடந்த பிப்­ர­வரி மாதம் ஒரே­நா­ளில் 5,527 பேர் பலி­யா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வில் ஒட்டு­மொத்த மரண எண்­ணிக்கை 360,000 ஆகக் கூடி­யுள்­ளது. இதன்­மூ­லம் உலக அள­வி­லான கொரோனா மர­ணப் பட்­டி­ய­லில் இந்­தியா மூன்­றாம் இடத்­தில் உள்­ளது.

கடந்த புதன்­கி­ழ­மை­யன்று பீகா­ரில் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான நோயா­ளி­கள் கிரு­மித்­தொற்­றால் இறந்து விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. மத்­திய சுகா­தார அமைச்சு நாடு முழு­வ­தும் 2,197 பேர் உயி­ரி­ழந்­த­தாக அறி­வித்­தது

ஆனால், பீகார் மாநி­லத்­தில் மரண எண்­ணிக்கை தொடர்­பில் மறு­க­ணக்­கீடு நடத்­தப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டது. பின்­னர் அம்­மா­நி­லத்­தில் மட்­டும் 3,951 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­னது. இந்­தத் தக­வல் மத்­திய சுகா­தார அமைச்­சுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து நாடு தழு­விய அள­வி­லான அன்­றாட மரண எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­தது.

பீகா­ரில் கொரோனா பாதிப்­பால் வீட்­டி­லும், தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் இறந்து போகி­ற­வர்­கள் குறித்து முறை­யா­கப் பதிவு செய்­யப்­ப­டு­வ­தில்லை என்ற புகார் நிலவி வரு­கிறது.

புதிய தொற்று, மரண எண்­ணிக்­கையை அம்­மா­நில அரசு மறைப்­ப­தாக பல்­வேறு தரப்­பி­ன­ரும் சாடி­யுள்­ள­னர்.

இதை­ய­டுத்து பீகார் உயர்­நீதி­மன்­றம் எண்­ணிக்­கை­களை மறு­த­ணிக்கை செய்­ய­வேண்­டும் என உத்­த­ர­விட்­டது. அதன்­பி­றகே நேற்று முன்­தி­னம் முத­லில் அறி­விக்­கப்­பட்ட மரண எண்­ணிக்கை பின்­னர் மாற்­றப்­பட்­டது.

மேலும் பல மாநி­லங்­களில் இதே­போல் தவ­றான எண்­ணிக்­கை­கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் குரல் கொடுத்து வரு­கின்­ற­னர்.

பிரே­ஸில், அமெ­ரிக்கா உள்­ளிட்ட பல நாடு­களில் மரண விகி­தம் இந்­தி­யாவைவிட பல மடங்கு அதி­க­மாக உள்­ளது. நேற்று முன்­தி­னம் நாடு முழு­வ­தும் புதி­தாக சுமார் 94 ஆயி­ரம் பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!