தாய்லாந்துக்கு 20 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி

தாய்லாந்துக்கு 20 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி

1 mins read
25938753-857e-4294-8476-26dbcaa474af
-

பேங்­காக்: ஃபைசர் நிறு­வ­னத்­தி­டம் இருந்து கொவிட்-19 தடுப்­பூ­சி­களை வாங்க தாய்­லாந்து உடன்­பாடு செய்­து­கொண்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்­சர் அனு­தின் சர்ன்­வி­ராக்­குல் தெரி­வித்து இருக்­கி­றார்.

முதற்­கட்­ட­மாக, இவ்­வாண்டு இறு­திக்­குள் 20 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை ஃபைசர் நிறு­வ­னம், தாய்­லாந்­துக்கு வழங்க வேண்­டும்.

அத்­து­டன், ஜான்­சன்&ஜான்­சன் நிறு­வ­னமும் நடப்பாண்­டில் 500,000 தடுப்­பூ­சி­களை தாய்­லாந்துக்கு வழங்கும்.

இது­வரை ஆஸ்ட்­ரா­ஸெ­னக்கா, சினோ­வேக், சினோ­ஃபார்ம், ஜான்­சன்&ஜான்­சன், மொடர்னா ஆகிய ஐந்து கொரோனா தடுப்­பூ­சி­க­ளுக்கு தாய்­லாந்­தின் உணவு, மருந்து ஆணை­யம் அங்­கீ­கா­ரம் அளித்து இருக்­கிறது.

இம்­மா­தம் 7ஆம் தேதி­ தாய்­லாந்­தில் பொது­மக்­க­ளுக்­கான தடுப்­பூசி நட­வ­டிக்கை தொடங்­கி­யது. இதைத் தொடர்ந்து, இம்­மாத இறு­திக்­குள் பத்து மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டிருப்பர் என எதிர்­பார்ப்­ப­தாக திரு அனு­தின் கூறி­னார்.